மீட்டியது சிவம் மீண்டது சிவம் (4)
மீட்டியது சிவம் மீண்டது சிவம் (4)
பூலோகத்தில் பூக்கள்
பறிக்க விண்ணில் இருந்து உன்னை
இறக்கிய வாகனம்
இறை பொருள் தந்த
இந்த தேகம் ஆகும்
இருக்கும்போதே
பூக்களைவ்பறித்து
மதுவையுண்டு
மாயை தெளிய
காண கிடைப்பவன்
சர்வம ஆவான்
அன்றும் இன்றும் என்றும் நின்றும்
காத்தும் பார்த்தும்
கடந்தும் படர்ந்தும்
அடர்ந்து வந்த
சூழல்கள் எதிலும்
எதிரே நின்று
காத்தவன் எவனோ
அவனை கொண்டு
வாழும் வாழ்வில்
விதிகள் என்பன
நீ விதிப்பவை அல்ல
சுயமது உயர காணும் யாவும் கடினம் என்பின்
Kaappadhu எங்கனம்
அறிவை கொண்டு
அறிதல் விடுத்து
நம்பிக்கை கொண்டு
உயர பழகு
இறைவன் மீது
பிடிப்பு பெருக
பிடிப்பவை எல்லாம்
பொயென அறிவாய்
இறை கொண்டு
காக்கும் வாழ்வு அதனை
முறை யுடன்
பக்தி கூட்டிக்
கூட்டி விளையும்
நன்மை யாதென
காண்பாய்
அகத்தில் உறையும்
தெய்வம் என்னை
நித்தியம் நித்தியம்
எண்ணி கொண்டு
பூஜிக்கும் பொழுதுகள்
பூர்வம் காட்டும்
ஆதியின் வேரில்
நீரை ஊற்றி
மரமாய் நிற்கும்
கற்பக விருக்ஷம்
T. ஜெயந்தி ராகவன்
Comments