நூலும் திரையும் - 5
நூலும் திரையும் - 5
இரண்டாம் பகுதி ஒரு வழக்குப் பற்றியது:
டாம் ராபின்சன்,
பாப் எவெல்'லின் மகள் மேயெல்லா எவெல்'லைக் கற்பழித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுக் காவலில் உள்ளான்.
ஜட்ஜ் டெய்லரே தேடி வந்து கேட்டுக்கொண்டதால் defense லாயராக வாதிடச் சம்மதிக்கிறார் Atticus Finch.
அவர், Tom Robinson அப்பாவி என்பதையும் நம்புவதால் விருப்பமாகவே அப்பணியை ஏற்கிறார்.
நகரில் பெரும்பான்மையர் வெள்ளையர். சிறுபான்மை எளிய மக்கள் கருப்பர்.
அதனால், பொதுவான தூஷணைக்கு உள்ளாகிறார். அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. தன் செம்மாந்த தன்மையுடன் கண்ணியம் காக்கிறார்.
பள்ளியிலும் வெளியிலும் அவள் வயதொத்த பிள்ளைகள் அவளுடைய தந்தை குறித்து, nigger-lover என்று கேலி பேசுகையில் ஸ்கௌட் கோபமுற்றுச் சண்டையிடுகிறாள்.
வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லும்போது, தன்னைப் பொறுமை காக்கவும், keep your head high என்றும் அவர் அறிவுறுத்துவது புரிந்தாலும்,
சக மாணவர்களிடையே தந்தையை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
அக்கம் பக்கத்தில் சில aunty'களும், அவர் ஒரு கருப்பருக்காக வாதாடவிருப்பதை விமர்சிக்கிறார்கள்.
வழக்கு நாளன்று நீதிமன்றம் நிரம்பி வழிகிறது.
கீழ் ஹாலில் நீதிபதிக்குப் பக்கவாட்டில் ஜூரிகளும் நடவடிக்கைக் குறிப்பெழுதுபவரும் உள்ளனர் .
எதிரில் பிராசிக்யூட்டர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக வாதிடும் Atticus,
அவர்களுக்குப் பின்னால் வாதி மேயெல்லா எவெல், அவள் தந்தை பாப் எவெல், குற்றம் சாட்டப்பட்ட டாம் ராபின்சன் அமர்ந்துள்ளனர்.
ஹால் முழுவதும் நகரவாசிகள்.
மாடி காலரியில் கருப்பினப் பார்வையாளர்கள்.
பிள்ளைகள் மூவரும் கீழே இடமில்லாமல் மாடியில் கருப்பர்களின்-சர்ச் பாதிரியாரின் அருகில் இடம் பிடித்து உட்கார்ந்துகொள்கிறார்கள்.
பிராசிக்யூட்டர், நகர ஷெரீஃபை, சாட்சி இருக்கையில் அமரச் செய்து, நடந்ததைச் சொல்லுமாறு கேட்கிறார்.
அவர், பாப் எவெல் ஓடிவந்து அந்தக் கருப்பன் தன் மகளைக் கற்பழித்தாகக் கூறி அவசரமாக அழைத்ததாகவும், வந்து பார்த்த போது, மேயெல்லா தரையில் கிடந்ததையும் - அவள் பலமாகத் தாக்கப்பட்டிருந்ததையும் - கழுத்தின் வலப்பக்கம் காயம் இருந்ததையும் கண்டதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்.
குறுக்கு விசாரணையில் 'ஷெரீப் நீங்கள் டாக்டரை அழைக்கவில்லையா' என்று ஆட்டிகஸ் கேட்டதற்கு, தானே நேரில், அவள் அடிவாங்கியிருந்த காயத்தைப் பார்த்ததால் மருத்துவரை அழைக்கவில்லை என்கிறார்.
அடுத்து, பாப் எவெல்'லின் வாக்குமூலம்:
டாம் ராபின்சன் தன் மகளை அடித்துத் தாக்கிக் கற்பழித்ததாகச் சொல்கிறார்.
ஆட்டிகஸின் குறுக்கு விசாரணையில், வீட்டுக்குத் திரும்பும் போது மேயெல்லாவின் அலறல் கேட்டு ஓடிவந்து ஜன்னல் வழியாக, அவன் தன் மகளைத் தாக்குவதைப்(banging) பார்த்து, வீட்டிற்குள் ஓடுவதற்குள் அவன் தப்பிவிட்டதாகவும், உடனே ஷெரீப் வீட்டுக்கு ஓடிப்போய் அவரை அழைத்துவந்து காட்டியதாகவும் டெஸ்டிமனி தருகிறார்.
'வீட்டுக்குள் ஓடுகிறீர்கள், ஷெரீஃபை அழைக்க ஓடுகிறீர்கள், டாக்டரை அழைக்க ஓடவேண்டும் என்று தோன்றவில்லையா' என்ற கேள்விக்குப் பாப் பொறுப்பான பதில் சொல்லவில்லை.
அடிவாங்கிய காயம் எந்தப் பக்கம் என்று கேட்டதற்கு அவளுடைய கழுத்தின் வலப்பக்கம் என்கிறார்.
கையெழுத்து போடத் தெரியுமா என்ற கேள்விக்கு இடது கையால் கையெழுத்திட்டுக் காட்டுகிறார்.
மேயெல்லா எவெல் தன் வாக்குமூலத்தில், அழுது ஆர்ப்பாட்டம் செய்து பிறகு,
ஒரு வார்ட்ரோப் கதவைப் பொருத்தித் தர, அந்த வழியில் சென்ற டாம் ராபின்சனை அழைத்தபோது, வீட்டினுள் வந்த அவன் தன்னைத் தாக்கியதாகவும் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்ததாகவும் தன் தந்தை சொன்னதை வழிமொழிவது போலச் சொல்லிவிட்டு, மேலும் எதுவும் கேட்கவேண்டாம், தான் மேற்கொண்டு எதையும் சொல்லமாட்டேன் என்று முடித்துக்கொள்கிறாள்.
இறுதியாக, டாம் ராபின்சனை விசாரணை செய்கிறார்கள்:
தான் வேலைக்குச் செல்லும் போதும் வீட்டுக்குத் திரும்பும் போதும், எவெல்களின் வீட்டு வழியாகச் செல்வது வழக்கம் என்றும்,
ஓரொரு சமயம் மேயெல்லா ஏதாவது வேலை செய்யக் கேட்டு, உதவும் எண்ணத்தில் அப்பணிகளைச் செய்து கொடுத்தது உண்டு என்றும்,
சம்பவ தினத்தன்று வாட்ரோப் கதவைச் சரிசெய்யுமாறு கேட்கவே வீட்டினுள் தான் சென்றதாகவும்,
மேலே பரணிலிருந்து அதை இறக்குவதற்கு ஒரு ஸ்டூல் மீது ஏறியபோது மேயெல்லா தன் கால்களைப் பற்றி அணைத்ததோடு தன்னை முத்தமிட்டதாகவும்,
தான் மறுத்து விலக முற்பட்டபோது ஜன்னலிலிருந்து மேயெல்லாவின் தந்தை பாப் எவெல் மகளை நோக்கிக் கத்திக் குரலிடவே,
தன் வீட்டுக்கு ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் தருகிறான்.
மேயெல்லா சொன்ன குற்றச்சாட்டை மறுக்கிறான்.
அவனுடைய இடக்கையை உயர்த்திக் காட்டச் சொன்னதற்கு அவனால் அப்படிச் செய்ய இயலாமல் அந்தக் கை செயலற்றதாகத் தொங்கிக்கொண்டிருப்பதை ஆட்டிகஸ் காட்டிப் பதிவு செய்யவைக்கிறார்.
விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, பிராசிக்யூடரும் ஆடிக்கஸும் தங்கள் தரப்பு வாதங்களைத் தொகுப்பாக முன்வைக்கிறார்கள்.
எவெல்ஸ் தந்தை-மகள் இருவரும் சொன்னவை நம்பத் தகுந்தவையாக இல்லையென்பதையும்,
தங்களைக் காத்துக்கொள்வதற்காக அப்பாவி ராபின்சன் மீது பழி சுமத்துகிறார்கள் எனவும்,
மேயெல்லா கற்பழிக்கப்பட்டதற்கான மெடிக்கல் சான்றாதாரம் இல்லை என்பதையும்,
டாம் ராபின்சனின் செயல்படாத இடக்கையால் மேயெல்லாவின் வலப்புறக் கழுத்துப் பகுதி தாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும்,
அவளை அடித்துத் தாக்கியது இடக்கைப் பழக்கமுள்ள அவளுடைய அப்பா பாப் எவெல்'லாக இருக்க வாய்ப்புள்ளது என்றும்,
டிஃபென்ஸ் லாயர் ஆடிக்கஸ் தன் வாதத்தில் நிறுவுகிறார்.
கோர்ட் இடைவேளைக்காக ஒத்திவைக்கப்படுகிறது.
(இடைவேளை விடுவோம்...
வெ.பெருமாள்சாமி
Comments