மீட்டியது சிவம் மீண்டது சிவம் ( 5)
மீட்டியது சிவம்
மீண்டது சிவம் (5)
இறைந்து கிடக்கும்
இறை உணர்வெல்லாம்
ஒன்று கூட்டி
உயிரால் காத்து
ஓம் திருநாமம்
ஓங்கி ஒலிக்க
ஒளிரும் ஜோதியின்
சுற்றும் படரும்
இருளின் தாக்கம்
விலகுதல் போலே
உந்தன் தடைகள்
தகர்ந்து விலகி
இனிமை கூட்டலில்
இனிதே விழைந்து
பாலம் பற்பல
பாலங்கள் தாண்டி
நூலேணி அதன் நுனிகள் பற்றி
அனுபவம் மொத்தம்
வெவ்வேறாக்கி
திளைக்கும் இன்பம்
உரு பொருளாக்க
பக்தி கூட்டின்
சக்தி கூட்டும்.
சிந்தனை பூட்டி
தியானம் கூட்டு
மௌனம் கூட்டி
பேச்சைப் பூட்டு
அறிவைக் கூட்டி
அஞ்ஞானம் பூட்டு
அன்பைக் கூட்டி
அழுக்காறு பூட்டு
கோபம் பூட்டி
கோயிலைக் கூட்டு
மனத்தைக் கூட்டி
குப்பைகள் நீக்கி
அகத்தின் உள்ளே
இறையை ப் பூட்டு
கட்டம் போட்டு
திட்டம் போட்டு
சட்டம் போட்டு
வட்டம் போட்டு
குறுகிய கட்டின்
வட்டம் பூட்டி
மட்டம் கூட்டு (increase level)
இன்சொல் கூட்டி
கடுஞ்சொல் பூட்டு
இன்முகம் காட்டி
வன்முகம் பூட்டு
உயரம் காண
தாழ்வை பூட்டு
தாழ்வை நீக்க
உயரம் கூட்டு
பயிரை காக்க
வெள்ளத்தை
வடிக்க
அகத்தின் வேள்வி
அதனை காக்க
தீமை வடித்து
நன்மை வார்ப்பது
அனுதினம் உன்னுள்
சிவத்தை காட்டும்.
T. ஜெயந்தி ராகவன்
Comments