நெடும்பலம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல்

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பண்ணைத்தெரு, நகராட்சிக்குட்பட்டதைக்கால் தெரு,, கடியாச்சேரி, பள்ளங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்றவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஏற்கெனவே திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உருக்கிறது.
இந்த நிலையில் நெடும்பலம்
பகுதியிலிருந்து டெல்லி மாநாட்டுக் சென்று வந்தவரின் மனைவியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா சோதனை  டெஸ்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது கொரோனாவைரஸ் பரிசோதனையில். அவருக்கு கொரோனாவைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரை ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி, தாசில்தார் ஜெகதீசன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் பழனி ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் கொரோனா வார்டில்
அனுமதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நெடும்பலம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்  தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடும்பலம் மெயின்ரோடு ரயில்வே கேட், ஒவர்குடி , சாலை பண்ணைத் தெருவுக்குள் நுழையும் சாலைகள், பைபாஸ் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெடும்பலம் முழுவதும்  தெருத்தெருவாக வாகனங்கள் மூலமாகவும், கை            ஸ்பிரேயர் மூலமாகவும் கிருமினி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளாவருடன் யார்யார் தொடர்பில் இருந்தார்கள், அவர் சென்றுவந்த இடங்கள், கடைகள், அங்கு பணியில் இருந்தவர்களை விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி.   படங்கள். மு. அமிர்தலிங்கம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,