மீட்டியது சிவம்  மீண்டது சிவம் (6)

மீட்டியது சிவம் 
மீண்டது சிவம் (6)


பேழைகள் திறக்கும் 
கோல்கள் கொண்டு 
கோள்களின்  வீச்சு 
கோளம் தாண்டும் 


எரியும் தீயில் 
பொய்மையை ஊற்ற 
மெய்யும் வந்து 
மெய்யை அடையும் 


யாகம் வளர்த்து 
யோகம் செய்தல் 
மோகம் அறுத்து 
போகம் சேர்க்கும் 


சங்கரன் சொல்லை 
சாஸ்வதம் ஆக்கினால் 
என்றோ விளைவது 
இன்றே விளையும் 


தேகத்தில் உள்ள 
எலும்பும் சதையும் 
நரம்புகள் முடுக்கி 
பிண்ணி வைத்தேன் 


உயிரை பாய்ச்சி 
அறிவை தெளித்து 
கூட்டில் உறைய 
உருகி கேட்டாய் 


நீ கேட்ட பிறப்பு 
நீயே கேட்டு 
வாழும் போது 
விதியென சொல்வீர் 


உந்தன் பாதை 
உயரம் சேர்க்க 
வேண்டிய மார்க்கம் 
அமைத்து கொண்டாய் 


விண்ணை தாண்டி 
பூமியை அடைந்து 
வந்த வேலைகள் 
யத்தனம் செய்து 


புவியில் உன் இருப்பை 
சாதகம் ஆக்கு 
உருளும் பொழுதுகள் 
உருண்டு போனால் 
வறண்டு போகும் 
பாதை காணும் 


பூலோகத்தில் பூக்கள் 
பறிக்க விண்ணில் இருந்து உன்னை 
இறக்கிய வாகனம் 
இறை பொருள் தந்த 
இந்த  தேகம் ஆகும் 


இருக்கும்போதே 
பூக்களைவ்பறித்து 
மதுவையுண்டு 
மாயை தெளிய 
காண கிடைப்பவன் 
சர்வம் ஆகும் 
சங்கரன் சொல்லை 
சாசனம் ஆக்கு..


T. ஜெயந்தி ராகவன் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,