சாக்ரடீஸ் சிந்தனை வரிகள்
சாக்ரடீஸ் சிந்தனை வரிகள்
- எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல. தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
- சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.
- யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலைச் சரியாகச் செய்கிறாரோ, அவர் கடவுளுக்குப் பிரியமானவர்.
- நமக்கு எது நன்மை என்பதைக் கடவுள் அறிவார்.
- நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள
தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.
- ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்துகொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.
- குழந்தைகளை மனிதநேயமுடையவர்களாக வளர்க்கும் கடமை
பெற்றோர்களுக்கு உண்டு.
- குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன்மூலம் ஒரு நல்ல
சமுதாயத்தை உருவாக்கலாம்.
- ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதே மனிதப் பிறவியின் ஒரே நோக்கம்.
- நாம் எதை இழந்தாலும் கெளவரத்தை இழக்கும்படியாக நடந்து
கொள்ளக்கூடாது.
- பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளைத் திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.
- கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம என்பது நாமே தெடிக்கொள்ளும் வறுமை.
- ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது.
தொகுப்பு செஏ துரைபாண்டியன்
Comments