திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு சார்பில் ஊராட்சி அலுவலக வளாகத்தில் சுகாதார களப்பணியாளர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு கொரோனோ நிவாரணம்
திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு சார்பில் ஊராட்சி அலுவலக வளாகத்தில் சுகாதார களப்பணியாளர்கள் 30 பேருக்கு அரிசி , காய்கறி, மளிகை பொருட்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சந்தானம், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் 69 முதியவர்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர் 69 முதியவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட தொகுப்பு பைகளை வழங்கினார். இதில் ஒன்றி ஆணையர் தமிழ்ச்செல்வன் , ஒன்றிய குழு துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தமயந்தி, சுஜாதா, ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா , சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
.
Comments