வெளவ்வால்கள் இனம்தான் சுகாதார சுற்றுச் சூழலுக்கான ஒரு குறியீடாக உதவுகிறது.

                   ICMR என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ( Indian Council of Medical Research ) அறிக்கை  ஒன்றின்படி தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள வெளவ்வால்கள் மூலம் கொரோனா தொற்று பரவுகிறது எனும் கூற்று, இந்த இனங்கள் வாழும் சுற்றுச் சூழல்களில் மனிதன் வாழ்வது ஆபத்தானது என்பதை பலப்படுத்துகிறது.       ஆனால் 


               ஜெர்மனியின் தலைநகரமான  பெர்லின் பெருநகரில் உள்ள ‘விலங்குகள் மற்றும் உயிரினங்கள் பூங்காவின் ஆராய்ச்சிக்கான லெப்னிஸ் ( Leibniz ) இன்ஸ்னிட்யூட்’டின் ஆராய்ச்சி வல்லுனர் ரோஹித் சக்கரவர்த்தி கூறுவது என்னவென்றால், தமது எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து 1200 வெவ்வால்களை கையாண்டு ஆராய்ச்சி “நடத்தியுள்ளேன், ஆனால் எந்த ஒரு தொற்றும் எனக்கு ஏற்பட்டதில்லை” என திட்டவட்டமாக கூறுகிறார். மேலும் அவர் கூறுகிறார் : பல நூற்றாண்டுகளாக, வெளவ்வால்கள் மனித இனத்துடன், சேர்ந்திசைவோடு அமைதியாக கூடி வாழும் ஒரு மென்மையான இனத்தைச் சேர்ந்தது என கூறுகிறார்.
     ‘ நீங்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெளவ்வால்களை அகற்றிவிடாதீர்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இவைதான் காரணம் எனும் தவறான, உறுதிப்படுத்தப்படாத செய்தியை வைத்து, வெளவ்வால்களுடன் நாம் வைத்திருக்கும் சேர்ந்திசைவு வாழ்வினை முடிவுக்கு கொண்டுவராதீர்கள், என்று தமது அறிவியல் முடிவினை பலப்படுத்துகிறார்.
பெங்களூரில் உள்ள ‘ பறப்பன மற்றும் ஊர்வன ( Avian and Reptile ) உயிரினங்கள் மறுவாழ்வுக்கான டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜெயந்தி கலம் கூறுகிறார் : “ கோவிட்-19 தொற்று வந்தவுடன் எனக்கு 15 போன் அழைப்புகள் வந்தன., வெளவ்வால்களை தமது பகுதிகளிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி கோரிக்கைகள்தான் அவை. வேறு இடங்களுக்கு மாற்றுவது மிகுந்த மோசமான நிலையாகும். நாம் வாழும் பகுதிகளின் சுற்றுச் சூழல் ( ecosystem) கெட்டுவிடும்., இந்த இனத்தின் வாழ்வு முறை ( life pattern )
அல்லலுக்கு உள்ளாகும்” என்கிறார்.
    “ இந்த இனம்தான் சுகாதார சுற்றுச் சூழலுக்கான ஒரு குறியீடாக உதவுகிறது. வெளவால்களை இடம் மாற்றினால் அவற்றிற்கு டென்ஷன் ( Stress)ஆகிவிடும்., இந்த மாற்று சூழ்நிலையால் வியாதிகளை பரப்ப வழி வகுக்கும். வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்த முற்படும்போது, வெளவ்வால்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்., அப்போதுதான் நோய் மனித சமூகப் பரவல் ஏற்பட வாய்ப்பு அதிகம் ஆகும்” என எச்சரிக்கிறார், ரோஹித் சக்கரவர்த்தி.
ஆதாரம் :  Oppili.P@timesgroup.com


தகவல் ஆர் . ராஜமாணிக்கம்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்