மொரார்ஜி   தேசாய்    என்ற   மாமனிதர்

மொரார்ஜி   தேசாய்    என்ற   மாமனிதர்


 


இந்தியாவின் நான்காவது பிரதமராக ஜனதா கட்சியின்  சார்பில்


1977  மார்ச் 24 முதல் 1979 சூலை 28  வரை இருந்த அவர் 1995-ல் இறந்த நாள்  இன்று (ஏப்ரல் 10)  அவர் பிறந்த நாளை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கொண்டாட  முடிந்தது, அவர் 1896  பிப்ரவர் 29  அன்று பிறந்ததால்.   அவர்  இந்திய  விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற் றவர். நீண்டகால அவரது  அரசியல் பயணத்தில், அவர்  பம்பாய்  மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தார்,   அவர் இந்திரா  காந்தி அமைசசரவையில் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும்  நிதி அமைச்சராகவும்  பதவி வகித்தவர். 1969-ல் காங்கிரஸ் பிளவு பட்டவுடன்  காங்கிரஸிலிருந்து விலகினார்.   1975-ல் அவசர நிலை  நாட்டில்   பிரகடனப்படுத்தப்பட்டபோது,  பல முக்கிய தலைவர்கள்போல் இவரும் சிறை  வைக்கப்பட்டார்.  அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் உள்துறை அமைச்ச8ரக இருந்தவர், மொரார்ஜி தேசாய் சிறையில்   அடைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று  ‘என்ன  இங்கே வசதி எல்லாம் எப்படி இருக்கிறது?  ஏதாவது குறை இருந்தால் மனு எழுதி தாருங்கள்.  ஏ.ஸி. போன்ற வசதி வேண்டுமானாலும் என்னிடம் தயங்கமல் கேளுங்கள்.  நான் பரிசீலிக்கிறேன்’  என ஏளனமாகக் கூறினார்.


            அதற்கு மொரார்ஜி தசாயோ,  ‘இப்போது அதெல்லாம் தேவையில்லை.  நாங்கள் வெளியே வந்தபிறகு, நீங்கள் உள்ளே வர வேண்டியது இருக்கும்  அல்லவா?  அப்போது அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்’  என்றார்.  


1977-ல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன்  காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக 84 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றார்.   இந்தியாவின் உயர்ந்த பாரத ரத்னா விருது பெற்றவர் தனது 99வது வயதில் இயற்கை எய்தினார். 


செ, ஏ, துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,