அரிஸ்டாட்டில் சிந்தனை  வரிகள்

அரிஸ்டாட்டில் சிந்தனை  வரிகள்


 


 


1.தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.


 


2.நம்முடைய நற்பண்புக்கும், நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.


 


3.மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்.


 


4.கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.


 


5.வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.அதுபோல, வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் வருவதில்லை.


 


6.ஒரு நாட்டின் வாழ்வு தாழ்வெல்லாம் அந்நாட்டு இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்திருக்கிறது.


 


7.உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவனாக்கும். தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனைத் தாழ்ந்தவனாக்கும்.


 


8.பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.


 


9.இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.


 


10.இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.


 


11.மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. 


இடையூறுகளும் துன்பங்களுமே.


 


12.கனவானது தூக்க நிலையின் சிந்தனை.


 


13.அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாமும் அன்பு செலுத்த முடியாது.


 


செ ஏ துரைபாண்டியன்









 

ReplyForward



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி