நான் ரசித்த ச ங்ககால பாடல்

 நான் ரசித்த ச ங்ககால பாடல்


  ( தொடர்)
சங்க காலப் பெண் புலவர்களில்
அறியப்பட்டவரான வெள்ளிவீதியார் எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே காண்போம்.
வெள்ளிவீதியார் காமத்தையும், உயிரையும் ஒப்பிட்டு பாடியிருக்கிறார். காமம் வந்தால் பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம் எனப்படும் வெட்கமும் போய் விடும் என்று அவர் அப்பாடலில் கூறுகிறார்.

“””அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி னோங்கு மணல்
சிறுசிறை தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில்லாதே
” (குறுந் தொகை 149)

இதன் பொருள் என்ன வென்றால் நாணமே, நெடுங்காலம் உன்னோடு இருந்து வருந்தியது போதும். இனிமேல் கரும்புக்கு நீர் பாய்ச்சுவதற்கு மண்ணால் இடப்பட்டிருந்த சிறு மணல் பாத்தியின் கரை நீர் நெருங்கி அடிக்கும் போது அக்கரை உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாங்கி காமம் (காதல்) மென்மேலும் நெருக்க என்னிடம் இருந்த நாணமும் போய் விட்டது என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம், காம மிகுதியால் உடைந்து போயிற்று; இல்லாது போயிற்று என காதல் பரிமாணத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
காதலை கவிநயத்துடன் எடுத்துரைக்கும் சங்கப் பாடல்களில் இந்த பாடல் மிக சுவையானது. அழகான ஒப்புமை இப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. காதலைப் போலவே அதன் சிறப்பையும் அதனால் மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும் உணர்வுகளையும் கூறும் இது போன்ற சங்கப் பாடல்கள் என்றென்றும் நமக்கு இலக்கிய இன்பம் தருவதாக அமைகிறது


 ரசித்தவர் உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,