திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர் ஊராட்சியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு ஊரடங்கு உத்தரவால் தவித்து வருபவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு சார்பில் உணவு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர் ஊராட்சியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகள் 8 பேர் ஊரடங்கு உத்தரவால் தவித்து வருபவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு சார்பில் உணவுக்கு தேவையான பொருட்களை ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 பேர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் பிழைப்பு தேடி வந்தவர்கள் கோடாரி, அரிவாள், மண்வெட்டி, கடப்பாறை உள்ளிட்டவைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்தனர்
இந்த நிலையில் கொரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை 144 தடை உத்தரவு நவடிக்கையால் சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் பரிதவித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்டவைகள் வழங்கினர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments