மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கண்டனம்
பெறுநர்,
உயர்த்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்
அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகம்,
பொருள் : தமிழக அரசின் அறிவிப்பான, மக்களுக்கு நேரடியாக உதவக்கூடாது என்பதற்க்கு,மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டனம்..
ஐயா,வணக்கம்.
மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்த பத்திரிகை செய்தி:
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எங்கள் கட்சியின் மூலம் முன் வைக்கும் கண்டனத்தை, செய்தியாக தங்களின் பத்திரிகை மற்றும் ஊடங்களில் வெளியீடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை 12.04.2020 நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தற்போது அச்சுரித்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் எந்தவித தனிநபர் மற்றும் சமுக ஆர்வளர்கள் உணவு பொருள் வழங்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த செய்தி உதவியின்றி தவித்து வரும் அனைத்து மக்களையும் வருத்தமடைய செய்துள்ளது.
இது மாபெரும் கண்டனதிற்க்கு உரியது. பல்வேறு அரசியல் காட்சிகள், தனி நபர், சமுக ஆர்வளர்கள்மற்றும் சமூக அமைப்புகளின் குரல் வலையை நெறிக்கும் விதமாக உள்ளது. நாம் நாட்டு பண்பாடு, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் வந்தாரை வாழவைக்கும் இந்த தமிழ் நாட்டில் இப்படி ஒரு சட்டம் ஏற்புடையதல்ல. நாம் நாட்டு மக்களை காக்க அனைவருக்கும் உரிமை உண்டு. மேலும் பாது காப்பது அனைத்து குடிமக்களின் கடமை. அதுவும் பசியால் வாடும் நலிந்த ஏழை எளியோருக்கு நேரடியாக தகுந்த சமூக இடைவெளியல் உதவி செய்து வரும்போது, இதுபோன்ற தடை உத்தரவை அளிப்பது ஆரோக்கியமானது அல்ல.
எனவே இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டும் எனவும் இது ஆரோக்கியமான அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்கிவிடும். உணவு இல்லாமல் தவித்து வரும் பசி பட்டினியால் வாடும் மக்களுக்கு அரசு செய்யும் துரோகமாக மாறிவிடும். இந்த தடை உத்தரவிற்கு மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
--
Comments