திருத்துறைப்பூண்டி கீரக்களூரில் அமைச்சர் காமராஜ்

திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூரில் கரோனாவைரஸ் பரவாமல் இருக்க கிரிமிநாசினி தெளிக்கும் பணியை துவக்கிவைத்தும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 8 தொழிலாளர்களுக்கு அரிசி , பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கி அமைச்சர் காமராஜ் வழங்கினார் . இதில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதையை அமைச்சர் காமராஜ் திறந்துவைத்து பொதுமக்கள் இந்த பாதை வழியாக உள்ளே வந்து காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும் என்றும் சமூக இடைவெளியை தவறாது பின்பற்றி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் தெரிவித்தாவது:


உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனாவைரஸ் தொற்று இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக தமிழகத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது  தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துவருவதால் வைரஸ் தாக்கம் கட்டுக்குள் உள்ளது இருந்தபோதிலும் நாம் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம் மூன்றாவது கட்டத்திற்கு வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்  மூன்றாவது கட்டம் என்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் அந்த பாதிப்பை நாம் நிச்சயமாக தவிர்க்க வேண்டும் அதற்கு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் தற்போது கிராமப்புறங்களில் தடுப்பு அமைத்து தடைசெய்யப்பட்ட பகுதி என்று தானாக முன் வந்து அந்தந்த ஊரில் இருப்பவர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் நகரப்புறங்களில் ஆங்காங்கே வருவதும் போவதுமாக இருந்து வருகின்றனர். அவர்களும் வருவதை தவிர்க்க வேண்டும் 
எல்லா இடங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பேசி தமிழக முதல்வர் நாள் தோறும் உத்தரவுகள் பிரப்பித்தும் பொதுமக்கள் புகார் குறித்து அந்தந்த இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். தமிழக மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ரேஷன் கடைகளை பொருத்தவர 96.83 சதவீதம் டோக்கனும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளது. பொருட்களை பொருத்தவரை கிட்டத்தட்ட 60 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது இன்னும் டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. யார் யாருக்கு எந்தெந்த தேதி எந்த நேரத்தில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அந்த நேரத்தில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எந்த வேலையில் ஈடுபட்டாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் விவசாய பொருட்கள் அவர்களுக்கு உரிய தேவையான உபபொருட்கள் கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை உரமாக இருந்தாலும், பூச்சிக்கொல்லி மருந்தாக இருந்தாலும் கிடைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் போன்ற விலை பொருட்களை விற்பதற்குரிய நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்துவருகிறார் இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை