மொபைல்  வீடியோ மூலம் பேசி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 

மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மொபைல் போன் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பள்ளி ஆசிரியர்கள்*


 


மொபைல்  வீடியோ மூலம் பேசி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 



தேவகோட்டை -  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், போன் மூலம் பெற்றோரையும் ,மாணவர்களையும் தொடர்பு கொண்டு, பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரை, போன் மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில், "ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து, ஒரு நாள் விட்டு ஒருநாள், மாணவ, மாணவியரின் பெற்றோரை, ஆசிரியர்கள் மொபைல்போன் மூலம் தொடர்பு கொள்வர். குழந்தைகளை கடைக்கு அனுப்பவோ, வெளியில் விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வாட்சப் வழியாக மாணவர்களை வீட்டிலிருந்தபடி  பேச செய்து வீடியோ அனுப்ப சொல்லி மாணவர்கள்,பெற்றோர்கள்  வீட்டில் இருப்பதை எங்கள் பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். இது அவர்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, சுமார் ஒன்றரை  மாதங்களுக்கு முன்பாக பிப்ரவரி 6ம் தேதி அன்று எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை தேவகோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் மூலமாகவும், அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர்   ஏற்பாட்டிலும் கை கழுவும் முறை குறித்தும் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினோம். ஊரடங்குக்கு முன்பாக மாணவர்களும்  அவர்கள் வசிக்கும் வீதிகளில் சென்று மிக அதிக அளவில் பொதுமக்களுக்கு கொரோனா  வைரஸ் தொடர்பாகவும் , கை கழுவும் முறைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. " என்றார்.


 


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரை, போன் மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,