.பறந்து போய்விடேன் கொரோனா.

கவிதை பக்கம்


                            பறந்து போய்விடேன்


வண்ணத்துப்பூச்சியாக
ஒளிரும் மின்மினியாக....
பறந்து போய்விடேன் #கொரோனா..
இங்கு மனிதம் நிலைக்க..


மனிதர்களும் மனிதர்களும்
மதங்களில் மோதிடாமல் காத்திட 
பறந்து போய்விடேன் #கொரோனா


நட்புக்களும் ,நண்பர்களும் 
நட்பினில் பிரிந்திடாமல் இருந்திட
சிறகை விரித்திடு சிட்டாக மறைந்து போய்விடு #கொரோனா


 ஏதுமற்றவர்கள் சாலையோரங்களிலும்
நிம்மதி நிறை வாழ்வை வாழ்ந்திட
நில்லாது சென்றிடு #கொரோனாகன்னமிட நினைக்காதே 
கள்வனாய்...
உன்னைவிட பெரிதில்லை என்ற நினைப்பை உள்ளத்தே கொள்கிறோம் 
கடந்து போய்விடு ...கள்ளமில்லா மக்களை மறந்துவிடு #கொரோனா


உழைப்பில் உயர்வுதாழ்வில்லை
உயிர் குடிக்கின்ற உன்னிலும் உயர்வுதாழ்வில்லை..


இதை உணரா மக்களும் 
மாக்களாகி
மனிதம் மறந்து மற்றதை போற்றுகின்றனர் 


போதாத காலமிதுவென்பதோ...
போதுமென்ற காலமிதுவென்பதோ
எதுவெனினும்
மக்களை மறந்து சென்றுவிடேன் #கொரோனா
வேறென்ன கேட்க :( தமிழ்ச்செல்விநிக்கோலஸ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை