ஹரீஷ் ராகவேந்திராவின் இசைவடிவ திருக்குறள்

      ஹரீஷ் ராகவேந்திராவின்.   இசைவடிவ திருக்குறள்



 இசைஞானி இளையராஜா இசையில் பாரதி படத்தில் இடம்பெற்ற "நிற்பதுவே நடப்பதுவே..." பாடல் மூலம் வெளிச்சத்துக்கு வந்து, தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகள் வாங்கி, பல மொழில்களில் 2500 பாடல்களுக்கு மேல் பாடியிருந்தாலும், பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா அடிப்படையில் ஒரு தமிழ் ஆர்வலர். நடிகராகவும், நாலைந்து படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ள இவர் தற்போது CyberSinger என்ற YouTube சேனல் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் திருக்குறள் முழுவதற்கும் இசையைத்து வருகிறார்.இசையமைப்பது மட்டுமன்றி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து குறட்பாக்களுக்கும் தெளிவுரைகளை எழுதி அவைகளை வர்ணனையும் செய்துள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மட்டுமன்றி வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நமது தமிழின் உன்னதப் படைப்பான திருக்குறளைப் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்த இசைவடிவ திருக்குறள் செயல்திட்டத்தை அவர் நிறைவேற்றி வருகிறார்.


                "ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு ராகத்தை அடிப்படையாகக் கொண்டு அமையுமாறு இசையமைத்து வருகிறேன். அதுமட்டுமல்லாது பொழிப்புரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குவதால், தமிழ் மறந்த வெளிநாடுவாழ் தமிழ்க்  குழந்தைகள் மற்றும் அனைவரும் திருக்குறள் பயிலும் விதமாக இசையோடு கலந்து செய்துவருகிறேன்.மேலும், உலகம் முழுவதும் வாழும் தமிழக் குழந்தைப் பாடகர்கள் மற்றும் வயதுவந்த பாடகர்களையும் என்னுடன் இணைந்து இந்த செயல்திட்டத்தில் பாடும் விதமாக இதைச் செய்வதில் ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது..." என்கிறார் ஹரீஷ் ராகவேந்திரா.


இது ஒரு sample song



இவர் வழங்கி வரும் இந்த திருக்குறள் அதிகாரங்களை கீழ்க்கண்ட Youtube  இணைப்புக்களை க்ளிக் செய்தால் கேட்கலாம்


 


https://www.youtube.com/channel/UC2XhqR3fw1ykz-hUn7Wuj7Q


https://www.youtube.com/watch?v=xE1mIRCEgHg


https://www.youtube.com/watch?v=bBhQDaRZv5I


https://www.youtube.com/watch?v=njo29RgOnkU


https://www.youtube.com/watch?v=oKuRoixz95U


https://www.youtube.com/watch?v=lUXzHPX0JEw


https://www.youtube.com/watch?v=xUq8B-WRBVY


https://www.youtube.com/watch?v=Wlmkiaq9EnE


https://www.youtube.com/watch?v=IajEyGEh95k


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி