விருத்தாசலத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருத்தாசலத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அனைத்து ஆசிரியர்கள்  கூட்டமைப்பு சார்பில் வழங்கபட்டது.


அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காப்பாளர், டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க,கூட்டமைப்பின் மாநில மையம் வழிகாட்டுதலின்படி, கடலூர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார் அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் வீரமணி, மாவட்ட பொறுப்பாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலையிலும்,
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட புதுக்குப்பம், திடீர்குப்பம், பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன் சாலை மற்றும் உளுந்தூர்பேட்டை சாலை ஓரத்தில் வசிக்கக்கூடிய 50 க்கும் மேற்பட்ட ஏழை எளிய  மக்களுக்கு,  அரிசி, காய்கறிகள், முக கவசம் உட்பட நிவாரணப் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை  மாநில துணை பொதுச்  செயலாளர் நீதிவள்ளல், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் பழனிவேல், ஒன்றிய செய்தித்தொடர்பாளர் வீரவடிவேலன், நல்லூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாயவேல்,  மேனாள் காட்டுமன்னார்கோயில் வட்டத் தலைவர் கிளிமங்கலம் சத்தியமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய முன்னணி நிர்வாகி வேல்முருகன், ஆகியோர் கலந்து கொண்டு  ஏழை எளிய மக்களுக்கு  உணவு பொருட்களை வழங்கினர். செய்தியாளர் . கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,