உலக ஹோமியோபதி தினம்

உலக ஹோமியோபதி தினம்  


 


                ஓமியோபதி   மருத்துவத்தின் தந்தை சாமுவேல் உறானிமென்   பிறந்த நாளை யொட்டி   ஏப்ரல் 10 ஒவ்வோர் ஆண்டும் உலக ஹோமியோபதி தினம் கடைபி0க்கப்படுகிறது.


ஹோமியோபதி விழிப்புணர்வு வாரம் ஏப்ரல் 10-லிருந்து 16 வரை கொண்டாடப்பட வேண்டுமென சென்ற ஆண்டு முடிவு செய்யப்பட்டது.  இந்த ஆண்டு அதன் கருத்து பொதுச் சுகாதாரத்தில் ஓமியோபதியின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதாகும்.    


கோவிட்  என்ற கொடிய  உயிர்க்கொல்லும் தொற்று இப்போது கோரத் தாண்டவமாடுவதால்  உலகிலுள்ள சுமார் 210 நாடுகள் அக்கொடிய நோயின் பிடியிலிருந்து  மீள வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.  எனவே வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.


ஹோமியோபதி என்கின்ற வார்த்தை கிரேக்க சொல்லான “ஹோமோ” என்பது “ஒத்த மாதிரியான” மற்றும் “பேத்தோ:” என்பது “வேதனை” எனும் அர்த்தம் தரும் சொல்லிருந்து வந்தது ஆகும்.


புகழ் வாய்ந்த ஜெர்மன் நாட்டின் மருத்துவரும் வேதியியல் நிபுணருமான டாக்டர் சாமுவேல் ஹானிமென் (1755-1843) என்பவர்தான்  இம்மருத்துவத்தின் தந்தை. 1839-ம் ஆண்டு முதற்கொண்டே ஹோமியோபதி இந்தியாவில் பரவத்தொடங்கியது. குறைந்த அளவான மருந்து கொடுத்து நோய்களை குணமாக்கும்  இம்மருத்துவமுறை நோயுற்றோருக்கு, மனரீதியாகவும், சிந்தனையிலும்,  ஆன்மிகத் துறை மற்றும் உடல்நிலையில் சமநிலையினை உண்டாக்குகிறது.  இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படாது. இயற்கையின் விதியின் அடித்தளமான “விருப்பத்தை விருப்பம் மூலம் குணப்படுத்துதல்” எனும் இந்த அறிவியல் தத்துவத்தை டாக்டர். சாமுவேல் ஹானிமேன் என்பவர் விளக்கினார். உடல்நலம் குன்றிய மக்களுக்கு கடந்த இருநூறு ஆண்டுகளாக நோயை நீக்கி சுகத்தை அளித்துக் கொண்டு வருகிறது.


 


இம்மருத்துவ முறையினால்  கொரோனா கொடிய நச்சை விரட்ட முடியுமா என்பதை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளுடன் இதனை முடிக்கிறேன். 


செ, ஏ, துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்