மீட்டியது  சிவம்  மீண்டது  சிவம்

 


மீட்டியது  சிவம் 
மீண்டது  சிவம் 
-----------------------------------


தீயினுள்ளே  ஒளிந்து 
கொண் டெனைத் 
 தீண்டிப் பார்க்கச் 
சொல்கிறாய் 


தீண்டத்  தீண்ட என் 
அகந்தை எரித்து 
பசுமம்  பூசிக் 
கொள்கிறாய் 


எனக்கு என்னை 
அறிய வைக்க 
 வதங்கள் பல 
புரிகிறாய் 


கர்மக் கப்பல் 
ஏற்றி விட்டு 
மர்மம் அவிழ்க்கச் 
சொல்கிறாய் 


என் கர்மம் யாவும் 
அகந்தைக்குள்ளே 
ஒளிர்ந்து கொள்ளச் 
செய்கிறாய் 



உன்னை மறக்கும் 
த ருணம்  எல்லாம் 
என் அகந்தை 
அன்றோ வென்ற து 


அகந்தை மயக்கம் 
கொண்ட பொழுது 
உன்னை மறக்கச் 
செய்யுது 


மயக்கத்தினூடே 
மயங்கிய குரலும் 
உன் நாமம் 
சொல்ல துடிக்கு து 



உனை நினைக்க நினைக்க என் 
அகந்தை ஆடி 
என் தவத்தை ஏனோ 
கலைக்கு து 


எத்தனை சுகம் 
சூழும் போதும் 
நிலை இல்லாது 
போகு து 


நித்திய சுகமது 
தேடிப் பார்த்தால் 
உன் பாதம் 
மட்டுமே மிஞ்சுது 


என்னை நானே 
செதுக்கி கொள்ள 
 சிற்பி நானும் 
இல்லையே 


உன் உளியின் 
அடிகள் என்னை 
செதுக்க நானும் 
வடிவம் பெறுகிறேன் 


சிறப்பத் தினுள்ளே 
உறையும் இறைவா 
சிற்பியாய்  எனையே 
செதுக்கி  பார் 


அகந்தை அழிந்து 
அகந்தை அழிந்து 
நானும் இறைவன் 
ஆகிறேன்..


   ------  T. ஜெயந்தி ராகவன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,