திருத்துறைப்பூண்டியில் நகர பகுதிகளை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்லமாக மூன்று வண்ண அடையாள அட்டை வழங்கல்
திருத்துறைப்பூண்டியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நகர பகுதிகளை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்லமாக மூன்று வண்ண அடையாள அட்டை வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருத்துறைப்பூண்டி பகுதிகளில் ஒருசிலருக்கு கரோனா வைரஸ் உறுதியான நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு நகருக்குள் வருவதை குறைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளை மூன்று மண்டலங்களாக பிரித்து 8 வார்டுக்கு ஒரு வண்ண அட்டை வழங்கப்பட்டுள்ளது.பச்சை வண்ண அட்டைதாரர்கள் திங்கள், வியாழன், நீல வண்ண அட்டை செவ்வாய், வெள்ளி, சிவப்பு வண்ண அட்டை புதன், சனிக்கிழமைகளில் நகரருக்கள் அனுமதிக்கப் படுவார்கள் குடும்பத்திலிருந்து ஒருநபர் மட்டும் அவரது ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் வரும் நபர்கள் 15 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. குறிப்பிட்ட நாட்களில் 8 வார்டுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிகப்படுவார்கள் சமூக இடைவெளியை குறைக்கவும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் நோய்தொற்று ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பாக நகருக்குள் வருவதற்கு உரிய ஆதாரங்களை காட்டினால் மட்டும் அதற்கு விதிவிலக்கு உண்டு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments