சரக்கொன்றை மலரின் மகிமை

சரக்கொன்றை மலரின் மகிமை


கொன்றை மலர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்துக்கள், கொன்றைப் பூவை சிவனின் பூஜைக்குரியதாகக் கருதுகின்றனர். சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.
கொன்றை மலர் பற்றி தமிழ் இலக்கியங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் புத்தாண்டான சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகின்றனர். குறிப்பாக, சித்திரை மாதத்தில் மட்டும் இந்த பூ பூக்கும். சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால், பல கோவில்களில் தலவிருட்சமாக உள்ளது. மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடத்தும் பூஜையில் சரக்கொன்றை மலருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, இந்த பூவுக்கு சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு.


மஞ்சுளா யுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,