அபூர்வ ஆன்மீக தகவல்கள்

அபூர்வ ஆன்மீக தகவல்கள் சில


தகவல் – 1 
அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலோ, நல்ல வெயில் அடித்தாலோ குடை வேண்டும். அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவை யும் அவை குடைபிடித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்கு கிறது என்பது ஒரு ரகசியம்.


பனிக்காலம் இலையுதிர் காலம். அப்போது, இந்த மரங்கள் இலையை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். அதாவது, குடையை மடக்கி விடும் எனலாம். அப்போது, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல, வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். சீதோஷ்ண நிலையால் அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற கருணை யுடன் தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டு விட்டனர் என்பது இன்னொரு ரகசியம். மரத்தடியில் ஒதுங்கும் சாக்கிலாவது, அங்கிருக்கும் இறைவனை ஒருதடவையாவது மனிதன் வணங்கிவிட மாட்டானா என்ற மகான்களின் ஆதங்கம், மரத்தடி தெய்வ பிரதிஷ்டையின் மற்றொரு ரகசியம்.


மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,