இந்தியாவில் முதல் பெண் பெருமை பெற்ற சாதனையாளர்கள்

இந்தியாவில் பெண்கள்  நிலை 


 


பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சம நிலையில் இருந்தனர்;
 இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்; தற்கால இந்தியாவில் பல உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருந்துள்ளனர்.இந்தியாவில் முதல் பெண் பெருமை பெற்ற சாதனையாளர்கள் சிலரைக்
காண்க.
 1848:  சாவித்திரி பாய் புலேவும்  அவரது கணவர் ஜோதிராவ் புலேவும் புனேவில்
பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர்.
 சாவித்திரி பாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
 1879: ஜான் எலியட் பெதுனே முதல் பெதுனே பள்ளியை 1849-ல் துவங்கினார்.
பின், 1879-ல் இந்தியவின் முதல் பெண்கள் கல்லூரியாக வளர்ந்தது.
 1883: சந்திரமுகி பாசுவும் கடம்பினி கங்குலியும் இந்தியாவிலும் பிரித்தானியப்
பேரரசிலும் பட்டம் பெற்ற முதல் பெண்கள்.
 1886: கடம்பினி கங்கூலியும்  ஆனந்தி கோபால் ஜோசியும்  மேற்கத்திய
மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் பெண்கள்.
 1898:  சகோதரி நிவேதிதா   பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது.
 1905: சுசான்னே   டாட்டா   தானுந்தை ஒட்டிய முதல் இந்தியப் பெண
 1910: சரளா தேவி சதுராணி அலகாபாத்தில் பாரத மகா மணடல் என்ற பெண்கள்
சேவை நிறுவனத்தை நிறுவியர்.


1913 சரோஜினி நளினி தத் முதல் மகிள சமிதியை தொடங்கியவர்.


 1916 : முதல் பெண்கள் பல்கலைக்கழகம் 5 மாணவர்களுடன் சூன் 2-ல் துவங்கியவர்
சமூக சீர்திருத்தவாதி தொண்டோ கேசவ் கார்வே
 1917 அன்னி பெசண்ட் இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்.
1919 பண்டித ரமாபாய் முதல் விதவைகள் இல்லத்தை தொடங்கியவர், சிறப்பான சமூக
சேவை செய்ததற்காக ஆங்கில அரசாங்கத்திடம் கைசர் இ இந்து பதக்கம் பெற்ற முதல்
பெண்மணி.


 1925: சரோஜினி நாயுடு இந்திய தேசிய காங்கிரசின் இந்தியாவில் பிறந்த முதல்
பெண் தலைவர்.
 1936: சரளா தாக்ரல் வானூர்தியை ஓட்டிய முதல் பெண் 1944: அசிமா சாட்டர்ஜி இந்தியப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம்
பெற்ற முதல் இந்தியப் பெண்.
 1947 ஆகஸ்த்து 15 அன்று இந்தியா விடுதலை பெற்ற பின், இந்திய கூட்டு
மாகாணங்களின் ஆளுநராக நியமிக்கப்பெற்ற முதல் பெண்மணி.
 அதே நாளில் அம்ரித் கவுர் இந்திய அரசின் நாட்டின் முதல் பெண் காபினட்
அமைச்சராக பொறுப்பேற்றார்.


 விடுதலைக்குப் பின் ருக்மணி தேவி அருண்டேல், இந்திய வரலாற்றில்
மாநலங்களவையின் முதல் பெண் உறுப்பினராக நியமிக்கப் பொற்றர்.
 1951: தெக்கான் ஏர்வேசின் பிரேம் மாத்துர் முதல் வணிகமுறை இந்திய வானோடி.
 1953: விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல்
பெண்ணும் முதல் இந்தியரும்.
 1959: அன்னா சாண்டி உயர் நீதிமன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல்
பெண்.
 1963:  சுசேதா கிருபளானி   இந்திய மாநிலங்களில் உத்தரப் பிரதேசத்தின் முதல் பெண்
முதலமைச்சர்.
 1966: கேப்டன் துர்கா பானர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண்
விமானி.
 1966: கமலாதேவி சட்டோபாத்தியாய் ராமன் மகசேசே விருது பெற்றர்.
 1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர்


 1970: கமல்ஜித் சந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல்
பெண் .


 1972:  கிரண் பேடி   இந்திய காவற்துறைப் பணியில் தெரிவான முதல் பெண்
அதிகாரி ]
 1978 ஷீலா பிரகாஷ் கட்டிடக் கலை நிறுவனத்தின் முதல் பெண் தொழில்
முனைவரானார்.
 1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்திய பெண்மணி.
 1984: மே 23- பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்.
 1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண்.
 1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி.
 1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண்
 1992:  பிரியா ஜிங்கன் இந்திய இராணுவத்தில் சேர்ந்த படை பயிற்சி பெற் முதல்
பெண்மணி. (பின் மார்ச் 6, 1993-ல் முதல் கமிஷன்ட் வீரரானார்.
 1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித்
தலைவர்.
 2007: சூலை 25 பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.
 2009: சூன் 4 மீரா குமார் நாடாளுமன்ற மக்களவையின் முதல் சபாநாயகர்.


ரெஜினா குப்தா  - முதல்  வழக்குரைஞர்


கல்பனா சௌலா - முதல் விண்வெளிப் பயணம்  செய்தவர்  


மருத்துவர் விஜயலட்சுமி ரெட்டி - முதல் மருத்துவர்


விஜயலட்சுமி பண்டிட் - முதல் பெண் தூதுவர்


அன்னா ஜரஜ் மல்கோத்ரா  - முதல் இந்திய ஆட்சிப் பணியில் அமர்ந்தவர்


தேவிகா ராணி  - முதலில் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்


தாரா செரியன் - முதல் பெண் மேயர்


ஆர்த்தி சாஉறா – ஆங்கிலக் கால்வாயை முதலில் கடந்தவர்


ஈலா மஜும்தாரி – முதல் பெண் பொறியாளர்


முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய மாநிலம் -  தமிழ் நாடு – 1921


இந்தியாவில் முதலில் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுமதித்தது - சென்னை மருத்துவ கல்லூரி


முதல் பெண்கள் பத்திரிகை இந்தியன் - லேடீஸ் (1901)


 இந்த பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெற வாழ்த்துகிறோம்


(பட்டியல் தொடரும்)


செ.ஏ.துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்