மனநலத்திற்கான ஒரு சின்னமே வெளிச்சம் அது மனதை ஆரோக்கியமாகவைக்க உதவுகிறது

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: 05/04/2020 அன்று இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்


 நம்மில் பலரும் கண்டிப்பாக நம்முடைய வீட்டுக் குள்ளேயே அடங்கித்தான் இருக்கிறோம். ஆனால் நாம் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களின் ஒன்றிணைந்த வலிமை நம்முடன் உள்ளது. அது நம் ஒவ்வொருவரின் வலிமை. அவ்வப்போது இது போன்ற ஒன்றிணைந்த வலிமையின் மாட்சிமையை, தெய்வீகத்தன்மையை உணர்ந்து கொள்வது நம்முடைய நாட்டுக்கும், மக்களுக் கும் அவசியமாக தேவைப்படுகிறது.இதுபோன்ற பெரும் போருக்கு எதிராக மக்கள் ஒன்றாக இணையும்போது அதை மக்களின் வடிவில் ஒன்றிணைந்த மகாசக்தியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த அனுபவம் நம்முடைய மனவலிமையை அதிகரிக்கும். தெளிவான பாதையை நமக்கு அது காட்டும். இதனை செயல்படுத்துவதற்கான பொது நோக்கம் மற்றும் வலிமையை அனைவருக்கும் அளிக்கும்.


தற்போது கொரோனா வைரஸ் தொற்று, திசை எங்கும் பரப்பி வரும் இருளுக்கு எதிராக வெளிச்சம் மற்றும் நம்பிக்கையை நோக்கி நாம் முன்னேற வேண்டும். இந்த வைரசால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை நம்முடைய சகோதர, சகோதரிகளாக ஏற்று, அவர்களின் சோர்வை விலக்கி நம்பிக்கை வழியில் கொண்டு செல்ல வேண்டும். கொரோனாவால் வந்த இருள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக ஒளியின் வலிமையை நாம் நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.


எனவே, வருகிற 5-ந்தேதி (நாளை) நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரப்பி வரும் இருளுக்கு எதிராக ஒளியின் வலிமையை எடுத்துக் காட்டுவோம். அன்று, 130 கோடி இந்தியர்களின் மாபெரும் வலிமையின் தன்மையை உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம்.


அன்று இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசல் படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள்.


நாம் ஒவ்வொருவரும் அனைத்து திசைகளில் இருந்தும் ஒரு விளக்கை ஏந்தி நின்றால் அந்த பேரொளியின் மாபெரும் சக்தியை நாம் உணர முடியும். நாம் அனைவரும் எதற்கு எதிராக போராடுகிறோம் என்ற பொதுவான நோக்கத்தை அது வெளிச்சம் போட்டுக் காட்டும். அந்த ஒளிச்சிதறலில், பிரமாண்டமான அந்த பேரொளியில் நான் தனியாக இல்லை நாம் யாருமே தனியானவர்கள் இல்லை என்று 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து உறுதியெடுப்போம்.


இது குறித்து பிரபல உளவியலாளர்  V.Sripriya தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்


Light is an important symbol and a tool to improve mental health. In psychology light is used as therapeuptic mood stabilizer for mood disorder patients. It creates positive vibe and right now wih all that’s happening  ,there is a need to create positive sentiment and  sense of togetherness.


V.Sripriya  .


Psychologist  .Chennai .



அவருக்கு நமது நன்றி


மனநலத்திற்கான ஒரு சின்னமே வெளிச்சம் அது மனதை ஆரோக்கியமாகவைக்க உதவுகிறது என்கிறார்


 இது உண்மையாகவே இருக்கக்சுகூடும்


வெளிச்சம் எப்பவும் நமக்கு ஒரு சாதகமான அதிர்வலைகளை உண்டாக்கிறது என்பதை அறிவோம்



 


 இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்படிப்பட்ட அதிர்வுகள் நம்மை பலப்படுத்தும்


 


 


 


 

 

 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,