சங்க இலக்கியத்தில் தாமரை

 


 


 


 


நான் ரசித்த இலக்கியம் 


சங்க கால இலக்கியத்தில் தாமரை
 
திருப்பரங்குன்றத்தை விளக்கும் பகுதியில்,
'இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து
வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி, எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்'
என்றுமுருகனைப் பற்றி நக்கீரர் குறிப்பிடுகிறார்.
தொட்டு உணருமாறு உள்ள சிறு, சிறு முள்ளுடைத் தண்டில் மலர்ந்த  தாமரையில் (அல்லித் தண்டு வளவளப்பாக இருக்கும்) பகல் நேரத்தில் தேன் உண்ண வந்த வண்டு, மயங்கி, இரவு நேரப் புறக் குளிருக்கு மாறாக வெதுவெதுப்பான வெப்பத்தைத் தன்னகத்தே பொதிந்து வைத்துள்ள தாமரையினுள் ''சொகுசாக மகிழ்வுடன் மயங்கி'' இரவு நேரத்தில் தங்கி இருந்துவிட்டு, மகிழ்வுடன் காலையில் 'தாமரை மலரும் போது' வண்டு பறந்து செல்கின்றது என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இப்பாடல் அடியில் புறச்சூழலில் எவ்வளவு குளிர்ச்சி உடையதாக இருந்தும் அகத்தில் அள வான, மிதமான, சிறு வெப்பத்தைத் தாமரை தாங்கி யிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்து கிறது. இதன் காரணமாக வண்டினங்கள் கூடக் ''கதகதப்புடன் துயிலுவதற்கு'' ஏற்ற இடமாகத் தாமரை உட்பகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பது காட்டப்படுகிறது


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி