புத்தர்களைத்தேடும் போதிமரம் 

புத்தக நாள் வாழ்த்துக்கள் 💐
*
புத்தன் அமர்ந்ததால்
காட்டு மரம் 
போதிமரம் ஆனது.


கவிஞன் தொடுவதால்
வெற்றுக் காகிதம்
புத்தகம் ஆகிறது.
*
போதிமரம் 
புதிய புத்தர்களைத் தேடுகிறது


புத்தகமும் 
நல்ல வாசகரைத் தேடுகிறது.
*
நல்ல புத்தகம்
ஒரு கையடக்க போதிமரம்..


படிக்கும் வாசகரை அது புத்தராக மாற்றுகிறதோ இல்லையோ
தேடல் தீராத 
பயணியாக மாற்றுகிறது.
*
அந்தப் பயணங்களால் நாம் புத்தம் புது மனிதராகிறோம்.
நமக்குள் நாமொரு 
புத்தராகிறோம்.
*
உலகப்
புத்தக நாள் வாழ்த்துக்கள். -


பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை