மங்காத தமிழென்று சங்கே முழங்கு

புரட்சிக்கவி கனக சுப்புரத்தினம்  இறந்த நாள்


 


                  கனக சுப்புரத்தினம் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் தமிழ் மொழி  மீது  கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார்.


தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி என்கிற புதுவையில் ஏப்ரல் மாதம்   29   ஆம்   தேதி  1891 ஆம் ஆண்டு  கனகசபை  முதலியார்  மற்றும்  இலக்குமி அம்மையார் தம்பதிக்கு மகனாய் பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய இயற்பெயர் “சுப்புரத்தினம்”. இவர் கொஞ்சம் விவரம்  தெரிந்தவராக  ஆனபின்,  தன்  தந்தையின்மீது  கொண்ட  அளவு  கொண்ட பாசத்தினால்  தன்   பெயரின் முதற் பாதியில் கனகசபை என்கிற அப்பாவின் பெயரினை சேர்த்து கனக சுப்புரத்தினம் என்று வைத்துக்கொண்டார்.


 தந்தை கனகசுப்புரத்தினம் புதுவையில் ஒரு மிக பெரிய செல்வந்தராக வலம்  வந்தவர்.   அச் சமயம் ஆங்கிலேயர் ஆதிக்கம் புதுவையில் இருந்ததால் கனக சுப்புரத்தினம்  பிரெஞ்சு  பள்ளியில்  ஆரம்பப்   படிப்பைத் தொடங்கினார். இருப்பினும் தமிழின் மீது இருந்த பற்றுதல் காரணமாக தமிழ் மொழியினை முறையாக  கற்க  ஆரம்பித்தார்.  அவர்  கனகசுப்புரத்தினம்  என்றே  அனைவராலும் அழைக்கப்பட்டார்.


இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி  அளிக்கத்  தலைப்பட்டன.  சிறு  வயதிலேயே  சிறுசிறு பாடல்களை அழகாகச்  சுவையுடன்  எழுதித்  தமது  தோழர்களுக்குப்  பாடிக்  காட்டுவார்.


தமிழ் மொழிப் பற்றும் தமிழறிவும் நிறைந்தவராதலின் கல்லூரி படிப்பில் தமிழ்  மொழியினைத்  தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைகழகத்தில்  முதல்  மாணவராக  தேர்ச்சி  பெற்றார்.


பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசால் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில்  அவர்  தமிழ்  ஆசிரியராக  நியமிக்கப்பெற்று  பணியாற்றத்  தொடங்கினார்.


ஒருமுறை அவருடைய நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு பாரதியாரும் வந்திருந்தார். பாரதிதாசனுக்கு அது தெரியாது.   விருத்துக்குப் பின்  தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதியார் கூற பாரதிதாசன் "எங்கெங்கு காணினும்  சக்தியடா" என்ற பாரதியாரின்  நாட்டுப் பாடல் பாடினார்.  அந்தப் பாடலே சுப்புரத்தினத்தை பாரதியாருக்கு அறிமுகம் செய்து  வைத்தது.   இவரின் முதற் பாடல்  பாரதியாருக்கு  மிகவும்  பிடித்துவிட்டதால் அந்தப் பாடலை பாரதியாராலேயே  சிறீ  சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு அவரது  சுதேசமித்திரன் இதழில் அவர் வெளியிட்டார்.


கனகசுப்புரத்தினம் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார்  மீது கொண்ட ஈர்ப்பினால் தன் பெயரினை பாரதிதாசன்  என்று  மாற்றிக்கொண்டார்.


புதுவையிலிருந்து  வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன்" என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.


தந்தை  பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தீவிரத் தொண்டராகவும் விளங்கிய அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தன் பாடல்கள் மூலம் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்ற பெரியாரின் கொள்கைகளைத் தழுவி பாடல்கள் மூலம் பதிவு செய்து தன் பங்கினை வழங்கினார்.


பாரதிதாசன் தன் 29 ஆம் வயதில் 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையாரை மணந்தார்.   இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகள் கழித்து 1928ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். பிறகு அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர்.  பாரதிதாசன் அவர்களின் பிள்ளைகள்


மகன் – மன்னர்மன்னன்


மகள்கள் – சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி


பிரபல  எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன்  அரசியலிலும்  தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற  உறுப்பினராக  1954 ஆம்  ஆண்டு  தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1946, சூலை 29 இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு  ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.


 பாரதிதாசன் சிறப்பு பெயர்கள் : பாவேந்தர், புரட்சிக்கவி, புரட்சிக் கவிஞர்.


 பாரதிதாசன் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார்.   இவர் 'குயில்' என்ற வார  இதழை  வெளியிட்டு  வந்தார்.  


அவரது  படைப்பில்  சில  முக்கியமானவை.


பாண்டியன் பரிசு


இருண்ட வீடு


அழகின் சிரிப்பு


குடும்பவிளக்கு


இசைஅமுது


எதிர்பாராத முத்தம்


குறிஞ்சித்திட்டு


முல்லைக்காடு


விடுதலை வேட்கை


 


பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்


"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"


"புதியதோர்  உலகம்  செய்வோம்  கெட்ட
     போரிடும்  உலகத்தை  வேரோடு  சாய்ப்போம்"


"தமிழுக்கும்  அமுதென்று  பேர் - அந்தத் தமிழின்பத்


     தமிழெங்கள்  உயிருக்கு  நேர்"


  " எங்கள்  வாழ்வும்  எங்கள்  வளமும்


     மங்காத தமிழென்று சங்கே முழங்கு".


 


பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார்.


அவற்றுள் சில: 1. அம்மைச்சி (நாடகம்) 

 2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)

 3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)

 4. எது பழிப்பு, குயில் (1948)

 5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)

 6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [1]

 7. கலை மன்றம் (1955)

 8. கற்புக் காப்பியம், குயில் (1960)

 9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [1]

 10. நீலவண்ணன் புறப்பாடு

 11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)

 12. பெண்கள் விடுதலை

 13. விடுதலை வேட்கை

 14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)

 15. ரஸ்புடீன் (நாடகம்) 


இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக்  கலித்துறைப்  பாடல்களைப்  பாடியுள்ளார்.


திராவிட  இயக்கத்  தலைவர்களுள்  முதன்முதலாக  திரைப்படத் துறைக்குள்   நுழைந்தவர்  பாரதிதாசனே  ஆவார்.  1937ஆம்  ஆண்டில் திரைப்படத்  துறைக்குள்  நுழைந்த  அவர்  இறுதிநாள் வரை அத்துறைக்கு  கதை,  திரைக்கதை,  உரையாடல்,  பாடல்,  படத்தயாரிப்பு என  பல  வடிவங்களில்  தனது  பங்களிப்பை  வழங்கிக்கொண்டு இருந்தார்.


 


இவர் எழுதிய பாடலான சங்கே முழங்கு எம் ஜி ஆர் நடித்த கலங்கரை விளக்ம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்று மக்களை மிகவும் கவர்ந்தது 


பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். அக்கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல்  சாகித்ய அகாடமியின் விருது  கிடைத்தது. இவருடைய படைப்புகள்  தமிழ்நாடு அரசினரால் 1990  இல்  பொது  உடைமையாக்கப்பட்டன.


பாரதிதாசன் அவர்கள் தனது 73 ஆவது வயதில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி 1964  ஆம்  ஆண்டு  உடல்நலக்  குறைவு  காரணமாக  மறைந்தார்.


 


            செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை