இருளர் இன மக்களுக்கு உதவி


           சென்னை, 15.04.2020  அன்று தாம்பரம் அடுத்துள்ள அகரம்தென், சத்திய நகர் மற்றும் கோவிலஞ்சேரி ஆகிய இடங்களில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களான இருளர் இன மக்கள் உணவின்றி தவித்து வருவதை அறிந்த பள்ளிக்கரணையை சேர்ந்த ராஜா மற்றும் நண்பர்கள் பொருள் உதவியுடன் ,


“இதய தெய்வம்” அப்துல் கலாம் சமூக சேவையாளர் மன்றத்தினர், செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதியின் பேரில் சமந்தபட்ட தாம்பரம் வட்டாச்சியர் திரு. சரவணன் அவர்கள் முன்னிலையில் ஒரு வாரத்திற்க்கு உண்டான அரசி உட்பட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.


 மேலும் இது போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அங்குள்ள அடுத்த பகுதியில் உள்ளவர்களையும் கணக்கெடுக்கபட்டது.


இது குறித்து தாம்பரம் வட்டாச்சியர் பேசியபோது சமூக ஆர்வலர்களை ஊக்கமளிக்கும் விதமாக சமூக ஆர்வலர்களிடம், இது போன்று தொடர்ந்து பாதிகப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் சமூக பணி செய்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியில் தொடர்ந்து உதவி செய்திடுமாறு கேட்டுக்கொண்டார் ,


சமூக ஆர்வலர்கள் அதன்படி தொடர்ந்து மக்கள் பணி செய்வோம் என உறுதி அளித்தனர், அப்போது உடனிருந்தவர்கள் அமைப்பின் தலைவர்முனைவர் வாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் ராஜா,செல்வாபிரியன்அமல்ராஜ்,ரவிமகேஷ்குமரேசன்மணி மற்றும் கிராம ஆய்வாளரும்,இரு கிராம நிர்வாக அலுவலர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டனர்.           


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,