உலகில் புரட்சிகர அத்தியாயங்களை எழுதிய, உலகை புரட்டிப் பல இயற்பியல் கருத்துக்களை மாற்றியமைத்த மக்கள் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

உலகில்  புரட்சிகர  அத்தியாயங்களை  எழுதிய,  உலகை புரட்டிப்  பல  இயற்பியல்  கருத்துக்களை  மாற்றியமைத்த மக்கள்  விஞ்ஞானி  ஆல்பர்ட்  ஐன்ஸ்டீனை  1955-ல்   உலகம் இழந்த  நாள் ஏப்ரல் 18


 


எப்பொழுதும்  வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி தொகுத்தளிப்பதற்குப் பதில் அவரது பொன்மொழிகள் சில மட்டும் இன்று தொகுக்கப் பெற்றுள்ளன.




  1. என்னிடம்  சிறப்பான  தனி  திறமை  எதுவுமே  இல்லை.    இருப்பது ஆர்வம்  மட்டுமே.  

  2. தொழில்நுட்ப மாற்றம்  கொடுமைக்காரன் கையில் கிடைக்கும் கோடாரி.  

  3. கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானதுதான்.  அதற்காக அது உருவாக்கப்படவில்லையே.

  4.  புதிர்களை விடுவிப்பது என்பது உருவாக்கிய முறையிலேதான் என்று  சொல்ல  முடியாது.

  5. கற்பனை  அறிவை  விட முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு.கற்பனை பறந்து பட்டது.



  1. திறமைசாலி பிரச்னையை அணுகுகிறான்.  அறிவாளி அதில் இருந்து  தப்பிக்க  நினைக்கிறான்.

  2. ஆர்வம்  என்னும்  புனிதத்தை  இழக்கக் கூடாது.

  3. புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் உள்ள வித்தியாசம் புத்திசாலி எல்லைகளை வகுத்துக் கொண்டவன்.

  4. எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் எதுவும் தன் வாழ்நாளில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

  5. 6 வயது குழந்தைக்கு எளிமையாக ஒரு விடயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில் அதை நீங்கள் சரியாக கற்கவிலை என்பதே பொருள்.

  6. கடவுள் என்ற சொல் எனக்கு  ஒன்றுமே இல்லை.  இது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு.   எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

  7. உன் முயற்சிகளைக் கைவிடாத வரை நீ    தோல்வி அடைந்தவன் கிடையாது.

  8. அடுத்தவருக்காக வாழும் உன் வாழ்க்கைதான் அர்த்தம் மிகுந்தது..

  9. நான் மாதக் கணக்கில் ஏன் சில வருடங்கள் கூட   யோசிப்பேன்.      99 முறை விடையைக்   கண்டு பிடிக்க மாட்டேன்.  100 வது முறை       நான் கண்டறிந்தவன்.  



  1. வெற்றி பெற்ற மனிதன் ஆவதற்கு முயற்சி  செய்யாதீர்கள்.  அதற்குப் பதிலாக  மதிப்புமிக்க மனிதன் ஆவதற்கு முயற்சி செய்யுங்கள்.

  2. என்னால் முடியாது  என்று கூறியவர்களுக்கு நன்றி. அவர்களால்தான் நான் இன்று சாதித்திருக்கிறேன்.

  3. முட்டாள்கள் தெரிந்து  கொள்வார்கள்.  சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

  4. வெற்றியாளர்கள் தங்கள் இலட்சியங்களைப் பற்றி சிந்திப்பார்கள்.  சிறுமையானவர்கள் பிற மனிதர்களைப்    பற்றி சிந்திப்பார்கள்.  உங்கள் சிந்தனைகளே நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கின்றன. 


செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,