நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்


 




நெஞ்சு பொறுக்குதில்லையே -


இந்த நிலைகெட்ட மனிதரை


நினைந்து விட்டால்


இன்றைய தினம் இக்கட்டுரையை எழுதும் பிற்பகல் 9-15 மணி  வரை  தமிழ் நாட்டில்  3 மருத்துவர்களும்  இந்தியாவில்  மொத்தத்தில்  12 மருத்துவர்களும் உயிர்  இழந்துள்ளனர். அனைவரும் தொற்று நோய்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்கள்.  அந்த நோய் தொற்று காரணமாகவே உயிரை விட்டவர்கள். மற்றைய பொதுமக்கள் தவிர்த்த செவிலியர்கள், சிகிச்சை அறை உதவியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள்,  தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், காவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், நோயாளிகளை இனம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோர், வருவாய்த் துறைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுநர்கள் போன்ற எண்ணற்றோர்  இறந்தது பற்றிய விவரம்  இப்போது  குறிப்பிடப்  பெறவில்லை.


கொரோனா என்ற மிகக் கொடிய தொற்று நோய் உலகையே நிலைகுலையச்  செய்துள்ள  நிலையில்,  இறந்த  மருத்துவர்களை சுடுகாட்டில்  நவ் அடக்கம் செய்ய விடாமல் தடுத்து, வன்முறையில் ஈடுபட்டு, இறந்தவர்களின் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அங்கிருந்த சமூக விரோதிகள், குண்டர்கள் இறந்தவருடன் வந்தவர்களை  கலலெறிந்து  காயப்படுத்தியுள்ள நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்து, மனம் கொதிக்கிறது.  ஆகவேதான்  பாரதியாரை  துணைக்கழைத்து  தலைப்பு  கொடுத்துள்ளேன்.    


இறந்த உடல் மூலம் எந்தத் தொற்றும் வராது என்பது தெரிந்தும்,  தாக்குதலில் ஈடுபட்டுள்ளோர் மிகக்  கடுமையான தண்டனைக்கு ஆட்படுத்தப்பட வேண்டும்.   நமக்கு மன ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி என்னவெனில்,  சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக  இந்த நிகழ்வினை  வழக்காக பதிவுசெய்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு அரசும் காவல் துறையும் இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்   என்று   ஆணையிட்டுள்ளது  என்பதுதான். 


இத்தருணத்தில், எட்டயாபுரம், பா.நா. கணபதி  எழுதிய ‘நினைவுகள் என்ற நூலிலிருந்து  ஒரு  தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


 


ஒரு முதிய காங்கிரஸ் தியாகி, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும்போது, தன்்பெயருடன், மே/பா. காமராஜர், தலைவர், சத்தியமூர்த்தி பவன், சென்னை என பதிவேட்டில் எழுதி கொள்ளும்படி கூறினார்.


 


ஒருநாள், அம்முதியவர் திடீரென்று இறந்து விட்டார்.  அவர் தந்த முகவரிப்படி காமராஜருக்கு  தகவல் தரப்பட்டது.  அதைக் கேட்டு அதிர்ந்து  போனார்  காமராஜர்.  ஏன் என்றால், இறந்தவர் யார் என்றே அவருக்குத் தெரியாது.



‘இறந்தவர் காங்கிரஸ் தியாகி என்ற முகவரியைத் தந்திருக்கிறார்.  அவருக்கு என்னிடம் அவ்வளவு நம்பிக்கை.  தியாகியின் இறுதிச் சடங்கை நல்ல முறையில் செய்ய வேண்டும் . . . ‘   என்ற கடமையுணர்வு அவரைது உள்ளத்தில்     மேலிட்டது.


மருத்துவமனை சென்று, இறந்தவரின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யும்படி, செயலர் வி.எஸ். வெங்கட்ராமனிடம் தெரிவித்தார்.  அன்று, தன் வழக்கமாக நிகழ்ச்சிகளை ரத்து செய்தவர், செயலற்றவராக, ஈஸி சேரில் சாய்ந்து விட்டார்.


சடலம், மூலகொத்தளம் சென்றடைந்து, எரியூட்டும் சமயம் அங்கு சென்ற காமராஜர், ‘இந்த தியாகி யாரோ .  .  . வீடு, வாசல், மனைவி, மக்கள் எல்லாவற்றையும் துறந்து, காங்கிரசில் சேர்ந்து பல அவஸ்தைகள் பட்டும் கூட, அக்கட்சியிடம் நம்பிக்கை  இழக்காத இவர், மரணம் அடையும் முன், காங். அலுவலக விலாசமே தந்துள்ளார்.  இவருக்கு நாம் எல்லாருமே கொள்ள போடுவோம்.  .  . ‘  என்று, நா தழுதழுக்க கூறிய வார்த்தைகள், அனைவரையும்  கண்ணீர் விட செய்தன.


ஒரு எளிய தியாகிக்காக, தியாக சீலரான காமராஜர் சிந்திய கண்ணீர்,  தூய்மையான  அன்பின்  வெளிப்பாடாக  விளங்கியது.   


செஏ துரைபாண்டியன்





 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி