உலக   புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்

உலக   புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்


 ஏப்.23                                                                                                        


               ஊரடங்கு என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த மக்கள்   முழு அளவில் தெரிந்து கொள்ளும் வகையில் உலகம் முழுவதும் சுமார் 210 நாடுகள் கொரோனா என்ற கொடிய நச்சு தொற்று நோயிடமிருந்து தப்பிக்க மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், சமுதாயப் பரவல் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் மக்கள் வீட்டில் தனிமை என்ற  நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பது மின்னணு தொலைக்காட்சி மற்றும் இணைய தளைய தகவல்கள்  மூலம் தெரிய வருகிறது. இந்நிலையில் தனிமையில் இருப்போருக்கு, தனிமையைக் கொல்ல வழிவகை உள்ளன.  புத்தகம் படித்தல், கதை/கவிதை/நாடகம் எழுதுதல், பேசும் திறமையை வளர்த்தல்,  ஓவியம் வரைதல், இசை, நாட்டியம் ஆடுதல் / கற்றுக் கொள்ளல் / புதிதாக ஏதாவது பாடங்கள், சமையல் செய்தல், உள்ளிருப்பு விளையாட்டுகளைக் கற்றுக் கொள்ளுதல்,  புதிய கண்டுபிடிப்புகளுக்கான  ஆராய்ச்சி செய்தல்  போன்ற பல்வேறு வழிகளில் தனிமையைப் போக்கிக்  கொள்ளலாம். புத்தகம் வாசித்தலின் அவசியம் பற்றி சில நாளேடுகள் பக்கம், பக்கமாக எழுதுகின்றன.  ஆகவே, அதுபற்றி மேலும் விளக்க முற்படவில்லை.                 


  உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும்


ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.


இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.


பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்படது.


 


"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டது.


இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர்.


 


இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள்.


உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.


ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைபிடிக்கப் படுகிறது.



யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடு வதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின் றன.


            தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, பேரறிஞர் அண்ணா அவர்கள் புத்தகம் வாசிக்க வேண்டியதன் அவசியத்தையும் வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அவருடன்  அவரது தம்பிமார்களும் அதனைப் பின்பற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.  அவர் தன்னுடைய வாழ்நாளின் குறிப்பிட்ட பகுதிளை நூலகத்திலேயே செலவிட்டு, அதிலும் குறிப்பாக, பேரறிஞர்கள், சாதனையாளர்கள், வரலாறு படைத்தவர்கள் வாழ்க்கை வரலாறை தேடி, தேடிப் பிடித்து படித்தார்கள் என்பது அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.  அந்த வரிசையில் நீங்களும்  சேர்ந்து  தனிமையை  வெல்லுங்கள்.  உங்கள் வாழ்க்கையை நீங்கள் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.


 


செ ஏ துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி