குளித்தலை பகுதியில் கொரனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் 

குளித்தலை பகுதியில் கொரனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் 


அரசு அனுமதியுடன் ஈடுபட்டுள்ள 40 இளைஞர்கள் நமது குளித்தலை பகுதி மாணவர் இளைஞர் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பின் தன்னார்வளர்கள் அனைவரையும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு. E. ராமர் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா மாணிக்கம் அவர்களும்  நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும். நன்றியினையும் தெரிவித்து பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்.முக கவசம், கைகள் கழுவும் லிக்வுட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். அனைவரும் பாதுகாப்பாக மக்கள் பணி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார், அது மட்டுமல்ல, கூட்டமைப்பின் சார்பில், ஆதரவற்றோர், ஏழை எளிய மக்களுக்கு தினசரி இரவு உணவு 40 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறோம். 5 நாட்களுக்கான உணவுக்கான செலவுகளையும் ஏற்று கொண்டுள்ளார் மக்களை காக்கும் பணியில் எந்த நேரத்திலும் என்ன உதவி செய்ய கோரினாலும் உடனடியாக செய்து தருவதாக உத்திரவாதம் அளித்துள்ளார்.மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலைகள் பொதுமக்களுக்கு எந்தவிதமான உதவி வேண்டுமானாலும் உடனே தொடர்பு கொண்டு தன்னை அணுகும் மாறும் கூறினார்.குளித்தலை பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் எந்த உதவியும் எந்த நேரத்திலும் செய்யத் தயார் என்று அறிவித்து இளைஞர்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து தொடர்ந்து பாதுகாப்பான முறையில் பணிகளை செய்யவும் அறிவுறுத்தி சென்ற


திரு.E. ராமர் MLA அவர்களுக்கு


திரு.இரா.மாணிக்கம் Ex.MLA அவர்களுக்கும்


குளித்தலை பகுதி மாணவர் இளைஞர் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக


ஒருங்கிணைப்பாளர்கள் திரு கடம்பை P.பிரபாகரன் , இரா.முத்துச் செல்வன், m.சுந்தர், A.சதாசிவம் , ச.பூமிநாதன், A.சக்திவேல் m.மது ,ஆகியோர்


 கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவித்து பாதுகாப்பான முறையில் மக்கள் பணி தொடரும் என்று தெரிவித்தனர்.


கரூர் முகிலன் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்