சாம்பல்

*சாம்பல்*    (கவிதை )


மனிதனின்
வாழ்க்கை
பயணத்தில்
இடையில்
வந்தது
கோவிட் 19...


நீயா
நானா
என்ற
திமிரையடக்க
திரண்டு
வந்தது
கிருமி..


மனித
உயிர்களை
கொத்து
கொத்தாய்
பிடுங்கி
உறவையே
தள்ளி வைத்து
அனாதை
பிணங்களாய்
ஆக்கி விட்டது..


இறப்புகளுக்கு
சவப்பெட்டி
இல்லை..
புதைக்க
இடமில்லை..
பரிதாப
மனநிலையில்
மனிதன்..


சுதந்திரமாய்
திரியும்
பிராணிகளையும்
காற்றில்
தன்நிலை
மறந்து
பறந்து
மகிழும்
பறவைகளையும்
ஊர்ந்து 
செல்லும்
புழு பூச்சிகளையும்
மொட்டையாய்
கிடந்த
மரக்கிளைகளில்
உயிர்த்தெழும்
துளிர்களையும்
பார்த்து
அழுது
புலம்புகிறான்
மனிதன்..


சின்னக் கிருமி
உலகத்தையே
உளுக்கி
வைத்துள்ளது
தன்
மகா சக்தியால்..


சாம்பலைக்கூட
தகனம்
செய்யா
நிலையில்
மனிதன்
மரணித்து
நிற்கிறான்..!!!


*பில்மோர் பாலசேனா*


மலேஷியா 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்