நான் ரசித்த தமிழ் இலக்கியத்திலிருந்து --- விவேகசிந்தாமணி
நான் ரசித்த தமிழ் இலக்கியத்திலிருந்து
இன்று விவேகசிந்தாமணி
தேனகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே
கிடந்ததைக்கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று தடங்கையில்
எடுத்துமன பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி மலர்க்கரங்
குவியும்என் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான் புதுமையோ
இதுவெனப் புகன்றாள்
இதன் பொருள்
தேனை அதிகமாக உண்டு மயங்கிய வண்டு கீழே வீழ்ந்து கிடந்தது-
அதை நாவற் பழமென்று கருதி தலைவி தன் மலர்ந்த கையினால் எடுததாள்.
முகத்துக்கு நேரே கொண்டு வந்து பார்த்தாள். வண்டு மயக்கம் தெளிந்து தன்னருகில் நிறை நிலா வந்து விட்டதாக எண்ணி தான் அமர்ந்திருக்கும் தாமரை மலர் (கை) குவிந்து விடும் என்று அஞ்சி பறந்து போனதாம்.
உமா தமிழ்
Comments