அணுவின் அணுவாயிருக்கும் கொரானாவே

                     கவிதை பக்கம்


 


அன்பான வணக்கம்
கொரானவே உனக்கு...  கவிதை


கொரானா...
கொரானா...
கொரானா...


அணுவின் அணுவாயிருக்கும்
கொரானாவே...


அகிலமே...
இந்த அகிலமே...
உன்னால் ஆட்டம் கண்டுள்ளது...


இனிமையான நாட்களை
இழந்து தவிக்கிறோம்...


ஈரமில்லா கொரானாவே
எல்லாமே உன்னால்...


காய்ச்சலோ தும்மலோ...
இருமலோ வந்தால்
தனிமையெனும் தண்டனையைக்
கொடுக்க வைக்கிறாய்...


எங்கும் தனிமை...
எதிலும் தனிமை...
எல்லாமே உன்னால்...


மணப்பெண்ணுக்கு பின்னால்...
விளக்கு ஏந்திட ஆளில்லை...


பிணத்திற்கு முன்னால்
தீச்சட்டி தூக்கிட ஆளில்லை...


ஊரும் உலகமும்
உன்னால் அச்சத்தில்...


விளைந்த தனைத்தும்
சந்தைக்கு வரவில்லை...


தொழில்கள் அனைத்தையும்
அழித்துக் கொண்டிருக்கிறாய்...


நித்தம் நித்தம் உன்னால்...
கொத்துக் கொத்தாய்
செத்து மடியும் மக்கள்...


இடுகாட்டில் இடமில்லாமல்
நாடே சுடுகாடாகிறது...


கோரத்தாண்டமாடும் கொரானவே...
இன்று நீ
மூன்றாம் உலகப்போரை
நடத்திக் கொண்டிருக்கிறாய்
உலக நாடுகள் அனைத்திலும்...


ஒன்றிலிருந்து நூறாகி
இலட்சத்திற்கும் அதிகமாக
உயிர்களைப் பறித்திடும் கொரானவே...
என்று தணியும்
உந்தன் கொலைவெறித் தாண்டவம்...


இத்துடன் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யச் சொல்கிறாயோ
அத்தனையையும் செய்ய
ஆயத்தமாக உள்ளோம்...


ஏ. இளவரசு


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,