சில மேதைகளின் நினைவாற்றல்
சில மேதைகளின் நினைவாற்றல்
· தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயர் மற்றும் அவரைப் பற்றிய பலவற்றை நினைவு கூறும் ஆற்றல் உள்ளவராக இருந்தார், 42-வது வயதில் அமெரிக்க வரலாற்றிலேயே இளம் 26 வது அதிபராக பொறுப்பேற்ற தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு சமயம், ஜப்பான் வங்கி ஊழியர் ஒருவரை, 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தபோது, முதல் சந்திப்பில், எதைப் பேசி முடித்திருந்தாரோ, அதை விட்ட இடத்திலிருநது தொடர்ந்து பேசி அவரை அசத்தினார்.
· ஜார்ஜ் பீட்டர் என்ற ஆங்கிலேய செல்வந்தர், தன் 10 வது வயதில், இரண்டு நிமிடங்களில், 4,444 பவுண்டுக்கு, 4,444 நாட்களுக்கு, 4.5 வட்டி வீதம், எவ்வளவு வட்டி வரும் என்று கணக்கு போட்டு கூறியுள்ளார். .
· எதையாவது மனனம் செய்ய வேண்டுமென்றால், அதை உரக்க படித்து, தன் நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்வார், ஆபிரகாம் லிங்கன்.
· போட்டியில் வெல்வதற்காக, மில்டனின் இழந்த சொர்க்கம் என்ற கவிதை தொகுதியை, ஒரே இரவில் மனப்பாடம் செய்தார் லார்ட் மெகாலே.
· எப்போது கேட்டாலும், தான் இயற்றிய எல்லா கவிதைகளையும் சொல்லும் திறனைப் பெற்றிருந்தார், லார்ட் பைரன் எனற ஆங்கில கவிஞர்.
· அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியல் நிபுணர், ஆசாக்ரே 25,000 வகையான தாவரங்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கும் திறமை பெற்றிருந்தார்.
· தன் கீழ் பணி புரிந்த ஒவ்வொரு போர் வீர்ரின் பெயரையும் தெரிந்து வைத்திருந்தார், ஜூலியஸ் சீசர்.
இத்தகைய ஆற்றல் பெற்ற ஒருவர் தமிழக அரசியல் கட்சியில் மூத்தவராக உள்ளார். ஆகவே, அவரது பெயர் இப்போது குறிப்பிடப் பெறவில்லை.
செ ஏ துரைபாண்டியன்
Comments