சொக்கருக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத்தங்கம் மீனாட்சியின் பள்ளியறை வைபவம்.

சொக்கருக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத்தங்கம் மீனாட்சியின் பள்ளியறை வைபவம்.


மதுரையின் அரசி மீனாட்சி!  
மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.


இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்புஇந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்:  
திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசிப்ராத  
சந்தியில் – பாலா  
6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி  
12 – 15 நாழிகை வரையில் – கெளரி  
மத்தியானத்தில் – சியாமளா  
சாயரக்ஷையில் – மாதங்கி  
அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி  
பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி  
அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது.  
மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள்.காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது சத்தியம்.  
எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமிசன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.  
அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.  
மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.  
மேலும்கணவன் மனைவி ஒற்றுமைக்குமதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.  
பிள்ளை இல்லாதவர்கள்காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.  
வியாபார நஷ்டம்தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்.  
இதையெல்லாம் விட தாயை இந்த எல்லா அலங்காரத்திலும் நாம் காண என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!  
.  
"பொன்னூஞ்சலில் பூரித்து,பூஷனங்கள் தரித்து!


ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து


கண்ணூஞ்சல் ஆடுகின்றாள் காஞ்சனமாலை


மயிலாள் பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...


பூலோக கைலாச,புண்ணியமா ம மதுரா,


ஆகாச சுந்தரேசா,சதானந்தமே கண்மலராய்!


இந்திரயங்கள் பூஜிக்க, சங்கரியும் பூரித்து


மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி


என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி சொக்கருடன் அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கும் பள்ளியறை  கோலம் கோலாகலமாய் கண்நிறைக்கும் ..


தேவ தேவோத்தமா


தேவதா சர்வ தோமா  
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா!  
பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா  
பாண்டியமண்டாலிதிபாச் சரிகா  
சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!பராக்!  
என்று கட்டியம் கூறி மதுரை அரசாளும் தம்பதியர்


தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம்,வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்  
ஆகிய 16 வகை தீபஆராதனைகள் களிப்புடன் ஏற்று உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பொழிகிறாள் சொக்கருக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத்தங்கமான அன்னை மீனாட்சி.தினசரி பள்ளியறை கட்சியைப் பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கும் .முடிந்தவர்கள் ஒருமுறையாவது மதுரை சென்று மீனாட்சியை நேரில் தரிசனம் செய்யுங்கள்


மஞ்சுளா யுகேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,