மூலிகை மருத்துவம்

மூலிகை  மருத்துவம் பகுதி 2



நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்


   நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர்


வேர்க்குருவிற்கு பனைநுங்குநீர்


   வெட்டைக்கு சிறுசெறுப்படையே


 


தீப்புண்ணா குங்கிலியவெண்ணை


      கீழ்காதுக்கு நிலவேம்பு


நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்


      நஞ்செதிர்க்க அவரிஎட்டி


 


குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்


      குருதிசுக்கலுக்கு இம்பூரல்வேர்


பெரும்பாட்டிற்கு அத்திநாவல்


      பெருவயிறுக்கு மூக்கிரட்டை


 


கக்கலுக்கு எலுமிச்சைஏலம்


   கழிச்சலுக்கு தயிர்சுண்டை


அக்கிக்கு வெண்பூசனை2


    ஆண்மைக்கு பூனைக்காலி


 


வெண்படைக்கு பூவரசு கார்போகி


     விதைநோயா கழற்சிவிதை


புண்படைக்கு புங்கன்சீமையகத்தி


     புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு


 


கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்


     கரும்படை வெட்பாலைசிரட்டை


கால்சொறிக்கு வெங்காரபனிநீர்


     கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே


 


உடல்பெருக்க உளுந்துஎள்ளு


     உளம்மயக்க கஞ்சாகள்ளு


உடல்இளைக்க தேன்கொள்ளு


     உடல்மறக்க இலங்கநெய்யே


 


அருந்தமிழர்  வாழ்வியலில்


   அன்றாடம்  சிறுபேணிக்கு    


அருமருந்தாய் வழங்கியதை


    அறிந்தவரை உரைத்தேனே .


                                                                        முற்றும் 


 


செ ஏ தரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,