திருத்துறைப்பூண்டியில் டாடா ஏசி வாகனம் மூலம் மலிவுவிலை காய்கறிகள் விற்பனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றிய பகுதிகளில் டாடா ஏசி வாகனம் மூலம் மலிவுவிலை காய்கறிகள் விற்பனை தொடக்கம்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு உத்தரவுப்படி திருத்துறைப்பூண்டி ஒன்றி பகுதிகளில் மலிவுவிலை காய்கறிகள் விற்பனை செய்ய டாடா ஏசி வாகனங்களில் சென்று விற்பனை செய் ஒன்றிய அலுவலர்கம் சார்பில் 5 கிலோ காய்கறிகள் ரூ 150க்கும், 3 கிலோ 100 ரூபாய், ஒன்றரை கிலோ காய்கறி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் பணிகள் ஒன்றிய வளாகத்தில் துவங்கியது . மலிவு விலைவாகன 
விற்பனையை தாசில்தார் ஜெகதீசன், போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் காய்கறி விற்பனையை துவக்கிவைத்தார். ஊர்காவல்படையில் பணியாற்றிவரும்  30 பேருக்கு நன்றி செலுத்தும் விதமாக முககவசம், கை கிளவுஸ், அரிசி உள்ளிட்டவைகளை ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் வழங்கினார்.
இதில் ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,