கொலைக் களத்தின் நூற்றி ஒன்றாம் ஆண்டு

கொலைக் களத்தின்


நூற்றி ஒன்றாம் ஆண்டு....


********


 


தூத்துக்குடியில் உள்ள ஒரு


ஆலையினால்... சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும்...நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும்...எல்லாவற்றிற்கும் மேலாக...உயிருக்கே உலையாக மாறும் சூழ்நிலை ஏற்படும் என்றும்...


2018-ஆம் ஆண்டில்...


99 நாட்களாக அமைதியாக ஒரு போராட்டம் நடைபெற்றது...


 


ஆனால்,


100-வது நாளன்று... அதாவது...


22-05-2018 அன்று நடைபெற்ற போராட்டமோ...


கலவரமாக மாறியது...


 


அந்தச் சூழ்நிலையில்..அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும்...


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளாலும்...


பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


 


அந்த நிகழ்வினை, பாட்டாளி மக்கள் கட்சியின்


இளைஞரணித் தலைவரான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள்...


தமிழகத்தில் இனி யாரும் போராட வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட


துப்பாக்கிச்சூடு... என கண்டனம் தெரிவித்தார்.


 


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர்


திரு. வைகோ அவர்களோ... தூத்துக்குடியில்


காவல் துறையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் அதனால் பலியானவர்களையும்... ஜாலியன் வாலாபாக்கில்... பிரிட்டிஷ் ராணுவம்


உயிர்களை வேட்டையாடியதைப் போல... தமிழக காவல்துறையும்


மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது  என்று குற்றம் சாட்டினார்...


 


திரு. வைகோ அவர்கள் குறிப்பிட்ட ஜாலியன்வாலாபாக்கில்...


அப்படி என்ன நடந்தது... எதற்காக நடந்தது..


அந்த இடம் எங்கு உள்ளது... என்பது பற்றி


இனி விரிவாகக் காண்போம்.


 


வட இந்தியாவிலுள்ள... பஞ்சாப் மாநிலத்தில்...


அமிர்தசரஸ் என்ற நகரத்தில்... அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு


மிக அருகில் உள்ளது ஜாலியன்வாலாபாக்.


6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தோட்டம்/மைதானம்..


சுற்றிலும் மதில் சுவர்களும்.. நடுவில் ஒரு பெரிய கிணறும்...


ஒரு சிறிய வாயிலையும் கொண்டது.


பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக ஏற்படுத்தப்பட்ட இடம்...


 


சுதந்திரப் போராட்டத்தின் காலகட்டத்தில்,  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிகமுக்கிய காரணமாக அமைந்த


இடம் ஜாலியன்வாலாபாக்.


1757-ஆம் ஆண்டு, வணிகம் செய்வதற்காக


இந்தியாவுக்கு வந்து... நாட்டையே ஆண்டு கொண்டிருந்த


பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக... இந்தியா முழுவதும் எதிர்ப்பு


கிளம்பியது..பின்னர்,  1857 -ஆம் ஆண்டிலிருந்து, அந்த எதிர்ப்பு...


சுதந்திரப் போராட்டமாக எழுச்சி பெற்றது..


 


இந்த நிலையில், 1919-ஆம் ஆண்டு.. 'ரெளலட்' என்ற சட்டத்தை


அறிமுகப்படுத்தியது பிரிட்டீஷ் அரசு


 


அந்தச் சட்டத்தின் மூலம்..அன்றைய வைஸ்ராய் ஆட்சிக்கு, அளவு கடந்த அதிகாரங்களை அளித்தது. அதன்படி,போராட்டக்காரர்களை மட்டுமல்லாது...,


பிடி ஆணையின்றி...சந்தேகத்தின் பேரில் தனிநபர்களையும் கைது செய்யவும்:


கைது செய்தவர்களை சிறையிலடைப்பதற்கும்...


பத்திரிகைகளை மௌனமாக்கவும்... அந்தச் சட்டம் வழிவகுத்தது.


 


கைது செய்யப்படுபவர்களுக்கு, சட்ட உதவியைப் பெறுவதற்கான


உரிமையைக்கூட அந்தச் சட்டம் தரவில்லை.


 


அந்த ரௌலட் சட்டத்தை, அனைத்து இந்தியர்களாலும்


கருப்புச் சட்டம் என்றழைக்கப்பட்டது.


பஞ்சாப் மாநிலத்தில் இச்சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில்


போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இரண்டு தலைவர்களை,


எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கைதுசெய்தனர்.


இதனால்,  அங்கு வன்முறை வெடித்தது.


 


அமிர்தசரஸ் மக்கள் காவல் நிலையத் தலைமையகம்


நோக்கிச் சென்றனர்.


அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதில்


10 பேர் இறந்தனர்.


 


இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக...


ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்பவரது தலைமையில்


சுமார் 600 ராணுவ வீரர்கள் அந்நகரத்துக்கு அனுப்பப்பட்டனர்.


 


வந்த இரண்டாவது நாளே, முறையான அனுமதியின்றி,போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவை  ஜெனரல் டயர் பிறப்பித்தார்.


 


இந்த உத்தரவைப் பற்றி சிறிதளவும் தெரியாத, அமிர்தசரஸ் சுற்றுவட்டார


மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர், ‘பைசாக்கி’/'வைசாக்கி' எனப்படும் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அமிர்தசரஸ் நகரத்துக்கு வந்தனர்.


 


(வைசாக்கி/பைசாக்கி என்பது பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படும்


அறுவடைத் திருவிழாவாகும்.)


 


வந்தவர்களெல்லாம்...பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக


ஏற்படுத்தப்பட்ட  ஜாலியன் வாலாபாக்கில் கூடினர்.


 


அது என்ன நிகழ்ச்சி, எதற்காக மக்கள் அங்கு வந்தனர்...


என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள விரும்பாத  ஜெனரல் ரெஜினால்ட் டயர்,


அங்கு கூடியிருந்த மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்போ... முன்னெச்சரிக்கையோ எதுவும் விடுக்காமல், துப்பாக்கிச் சூடு நடத்த


ஆணையிட்டார்.


ஏறததாழ 10 நிமிடங்களாக...1,650 முறை  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


ஒரு சிப்பாய் 33 தடவை என்ற முறையில் சுடப்பட்டன.


 


சுற்றிலும் மதில் சுவர்கள் கொண்ட அந்த இடத்திலிருந்து  கூடியிருந்த மக்களால்...பெண்கள் குழந்தைகள் உட்பட யாராலும் வெளியேற முடியவில்லை.


 


அந்த இடத்தின் குறுகிய வாயிலும்


காவலர்களால் அடைக்கப்பட்டுவிட்டது.


அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து


பலர் மாண்டனர்.


 


அந்த சம்பவத்தை நேரில்


கண்ட ஆண்டர்ஸன் என்பவர்


(ஜெனரல் டயரின்


பாதுகாவலராக இருந்தவர்)


கூறியதாவது :


 


"துப்பாக்கிச்சூடு தொடங்கியதும்,


அங்கிருந்த பொதுமக்கள் கூட்டம்


தரையோடு குனிந்து கொண்டார்கள்.


பலரும் பிரதான நுழைவுவாயில்


நோக்கி ஓடத் தொடங்கினர்.


மேலும் சிலர் உயரமான சுவரில் ஏறி


தப்பிக்க முயன்றனர். ஜெனரல் டயர்


துப்பாக்கிச்சூட்டை நிறுத்த உத்தரவிட்டபோது,


ஜாலியன்வாலாபாக் மைதானம், இறந்த உடல்களால் நிறைந்திருந்த


போர்க்களம் போல காட்சியளித்தது."


 


உண்மையாக அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று யாருக்கும்


தெரியாது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு 379 பேர் மட்டுமே இறந்ததாகவும்,


1,137 பேர் காயமடைந்ததாகவும், கணக்கு காண்பித்தது அரசு.


 


ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்திற்கும் அதிகமாக


இருக்கலாம் என்பது பலரது கணிப்பு. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்


காயமடைந்தனர். இரவு முழுவதும் காயமடைந்தவர்களிள் கதறல்.


 


எங்கும் அலறல்களும்...கண்ணீரும் ரத்தமும் ஆறாப்பெருக்கெடுத்தோடிய...


இன்றளவும் ஈரம் காயாமல், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த


மதில் சுவர்கள் இருக்கும் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில்


கொடூரமான கொலைவெறித் தாக்குதல்


நடந்த நாள்   13-04-1919.


 


அன்றைய தினம் இறந்தவர்களை


இன்று


13-04-2020-ஆம் நாளிலாவது


நாம் நினைவில் கொள்வோம்.


 


 


ஏ.இளவரசு


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,