கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதியும் தேசிய குழு உறுப்பினர் மகாவீர்சந்த  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பிய உள்ள மனு

அகில இந்திய ஜெயின் சிறுபான்மை கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதியும் தேசிய குழு உறுப்பினர் மகாவீர்சந்த  மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பிய உள்ள மனு


பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் வியாபாரிகள் சார்பில் அனுப்பப்பட்டது


உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும்கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் இருந்து வருகிறது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி 144 தடை உத்தரவு தமிழக அரசு அறிவித்துள்ளது.


 நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தேவையான அனைத்து ஆலோசனைகளும் பெற்று  கொரோனா வைரஸ் நோயை தடுத்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு அயராது தமிழக அரசு உழைத்து வருகிறது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில்
மேலும் வருவாய் துறை, சுகாதாரத் துறை ,காவல்துறை, தீயணைப்புத் துறை, மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்டு செயல்படுத்தப்பட்டு அனைத்தையும் மக்களுக்காக அர்ப்பணித்துப் பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நிலையில் பொதுமக்கள் தனியார் மற்றும் வங்கி கடன்கள் வாங்கி இருக்கும் அனைத்து கடன்கள்  விவசாயம் ,வாகனம், சிறு குறு விவசாயிகள் போன்றவற்றிற்கும் மற்றும் வட்டியிலிருந்து மூன்று மாதங்கள் விலக்கு அளித்து பொதுமக்களை நிம்மதி அடைய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் தொழில்கள் உற்பத்தி செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து அனைத்து தரப்பு மக்களும் உள்ளார்கள்.வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவானதால் வீட்டுக்காவலில் இருந்து கொண்டு பொதுமக்கள் பொழுது போக்குவற்கு தொலைக்காட்சி மற்றும் வலைத்தள சேவை, மின்விசிறி ,ஏசி போன்றவற்றை குறைந்தது நான்கு முதல் ஐந்து பேர் 18 முதல் 20 மணி நேரம் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்த மூன்று மாதங்கள் மார்ச், ஏப்ரல் ,மே மட்டும் சாதாரணமாக மின்சாரம் உபயோகிப்பாளர் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு கணக்கிடப்படும் அவர்களுக்கு உரிய மின் கட்டணத்தை ஸ்லாப் சிஸ்டம் இல்லாமல் சாதாரண கட்டணத்தை கூடுதல் கட்டணம் இல்லாமல் செலுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.மேலும் பல சிறு தொழில்களும் சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச பயனீட்டு அளவுக்கு கட்டாயமாக செலுத்த வேண்டிய தொகை யிலிருந்தும் அபராதம் இல்லாமல் விலக்கு அளித்து காப்பாற்ற வேண்டுமென்று அனைத்து பொது மக்கள் சார்பாகவும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளார். அகில இந்திய ஜெயின் சமூக கூட்டமைப்பு தேசிய குழு உறுப்பினர் மகாவீர்சந்த செய்தியாளர்களை 
சந்தித்து கூறியுள்ளார்.


செய்தியாளர். கடலூர் R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,