பொன் விழா ஆண்டாகக் கொண்டாடப்படவேண்டிய பூமி தினம்

                    பொன் விழா ஆண்டாகக் கொண்டாடப்படவேண்டிய பூமி தினம்   


பிரபஞ்சத்தில்  நமக்கிருக்கும்  ஒரே  வீடு  இந்த  பூமிதான்.  இதையும் நாம் சேதப்படுத்திவிட்டால் வருங்கால சந்ததி மன்னிக்காது. இதை அனைவருக்கும் நினைவுபடுத்தவே ஒவ்வோர்  ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


பூமியின் வெப்பநிலை இதே வேகத்தில் அதிகரித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள். கடந்த நுாற்றாண்டில் மட்டும் உலகின் வெப்பம் 0.74 டிகிரி அளவுக்கு உயர்ந்து  உள்ளது.  குளிர்காலத்தில்  இயல்பைவிட  0.5  டிகிரி  வெப்ப நிலை  அதிகரித்தால்  கோதுமை  உற்பத்தி 17 சதவீதம் வரை பாதிக்கிறது. இதனால் நெற்பயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.


இந்த வெப்பநிலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்பை விட துருவப்பகுதிகளில் இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. துருவப்பகுதிகளில்  இருக்கும் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுகின்றன. இதனால் கடல்மட்டம் வெகுவாக உயரக்கூடும்நமது பூமியை பள்ளிக் கூடங்களில் இருக்கும் உலக உருண்டை அளவு சிறியதாக  கற்பனை செய்து கொண்டால், அதில் இரண்டு பூச்சு பெயின்ட் அளவுக்கே காற்றுமண்டலம் சூழ்ந்துள்ளது. பூமியின் அளவை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இதுதான் நாம் உயிர் வாழ உதவுகிறது. ஆபத்தான காஸ்மிக் கதிர்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

இது இல்லாவிட்டால் மழையின் வேகத்தை கூட நம்மால் தாங்க முடியாது. இது இப்போது சேதமடைந்து வருவது வேதனைக்குரியது. ஒரு லிட்டர் பெட்ரோல்  எரிக்கப்படும்போது  4  கிலோ  கார்பன் டை ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க  நம்மால் பல வழிகளில் உதவ முடியும். சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் பெறலாம். மரங்கள் நடுவது, மரங்களை பாதுகாப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


இப்போது பல தனியார் அமைப்புகளும், சேவை நிறுவனங்கள், ஆன்மிக குழுக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பது  வரவேற்கத்தக்க  விஷயம்.


1969   ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10,000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson)  பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் முதல்  பூமி தினத்தைக் கொண்டாடினார்வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.


 பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 


செ ஏ துரைபாண்டியன்


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்