காதற்ற ஊசியும் வாராது காண் 


பட்டினத்தார் பாடல் -  காதற்ற ஊசியும் வாராது காண் 


வாது  உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போது உற்ற போதும்  புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.


இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லை. அவ்வளவு எளிய பாடல்.


காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே


நாம் இறந்த பிறகு, ஒரு உடைந்த ஊசி கூட நம்மோடு வராது. பெரிய தத்துவம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான்.


இந்த ஒரு வரியை படித்தவுடன், இருந்த சொத்தை எல்லாம் ஊராருக்கு அள்ளி கொடுத்துவிட்டு , பட்டினத்தார் ஒரு கோவணத் துணியுடன் வீதியில் இறங்கி விட்டார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,