மனிதர்கள் வாழ்வார்கள்

மனிதர்கள் வாழ்வார்கள்


 



பத்தாண்டுக்கு மேலான காலம் தந்துள்ளது நல்லன நூறு
வறுமைக்கு வறுமை
வறியரினும் வறியர் 5%க் கும் கீழே
போலியோ போயே போச்சு
முடமாகி காலமெல்லாம் வலி சுமந்த காலம் இனி இல்லை
மலேரியாவையும் மலை ஏற்றிவிட்டோம்
பிறப்பிலேயே மரிப்பு அரிதாகிவிட்டது
வளரும்போதும் வியாதிகள் அண்டாதிருக்க வாக்ஸினேஷன்
பஞ்சத்தை புறம் கண்டொம்
பசுமை புரட்சி வெண்மை புரட்சி நீலப் புரட்சி மஞ்சள் புரட்சி எனப் பல வண்ண புரட்சி செய்தே
கையடக்க கைபேசிக் கொண் டே எல்லாமும் முடியும்
படிக்க முடியும் கணக்கு செய்ய முடியும் வாங்க முடியும் விற்க முடியும்  தவறு செய்பவனை பிடிக்கவும்  காதல் செய்யவும் கண் இமைப்பதற்குள்
பணம் எடுக்க முடியும் அனுப்ப முடியும் ஏமாற்றவும் முடியும்
தொழில் நுட்பம் மலைப்பை தருகிறது
எண்ணிலடங்கா ஏற்றங்கள் இன்னமும் கைகூடும் எதிர்காலம் ஒளிமயம் தான்
நினைந்து நினைந்து மகிழ்ந்திடுங்கள்
நெஞ்சு நிமிர்த்தி நடந்திடுங்கள்
ஆனால் ஆணவம் கொண்டு இயற்கையை அல்லவா அழித்தோம் பெற்றோரைப் பழித்தோம் உடன்பிறந்தோரை மறந்தே போனோம் 
அண்ணா வாழ்கின்றார்
ஆட்டோக்காரராய் 
அக்கா வீட்டுவேலைக்காரி
உறவுகள் எல்லாம் அந்த நேரத்தில் காரியம் சாதித்துக் கொள்ளும் சமத்காரம்
ஓடிக் கொண்டிருக்கிறோம்
பணமே பிரதானமென்று  
ஓட்டத்திற்கு ஓர் முடிவு வந்தது கொரோனா என்று
தொழில் நுட்பம் தோற்றது
மொத்த மனித சமுதாயமே அச்சப்பட்டு அடங்கிப் போனது
தாத்தா அழைத்தார்
அச்சம் தவிர் என்றுரைத்தார்
ப்ளூட்டோனிக் பிளேக்
செய்யாததை கொரோனா செய்யாது 
மனிதர்கள் வாழ்வார்கள் என்றார்


நான் என்னாவேன் என்றால் அழிவாய்
நாம் என்னாவோம் என்றால் வாழ்வோம்


---P. S. மஹாதேவன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,