கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் பாலக்கரை ரவுண்டானாவில் டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சார் ஆட்சியர் பிரவீன்குமார், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தொழிலதிபர் எம். அகர்சந்த், எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் விளக்கிப் பேசினார்கள். பின்பு, கிராமிய பாடல்கள் மூலம் எமதர்மன் வேடமிட்டு கொரோனா நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
அவ்வழியே முக கவசம் அணியாமல்  வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, எம்தர்மன்  வேடமிட்டவர் சென்று அழைத்து வந்து அவருக்கு, முக கவசம் அணிவதன் நோக்கம் குறித்து பாடல் மூலம் விளக்கப்பட்டது. பின்பு, அவருக்கு சார் ஆட்சியர் பிரவீன்குமார் முக கவசம் அணிவித்து விளக்கி கூறினார்.
இந்த நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அங்கு கூடியிருந்த வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தாசில்தார் கவியரசு, நெய்வேலி நில எடுப்பு தாசில்தார் அந்தோணி, போக்குவரத்து ஆய்வாளர் சிவராம ஜெயம், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், கிராம அலுவலக உதவியாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர். 
கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,