திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு சமூக இடைவெளி அமைத்து வழங்கும் பணி துவங்கியது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஒன்றிய நகர பகுதிகளில்  கொரோனா வைரஸ் நிவாரண தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் ஒன்று  100 குடும்ப கார்டுகளுக்கு சமூக இடைவெளி அமைத்து வழங்கும் பணி துவங்கியது.


 


 


 திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் 111 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 89 முழுநேரமாகவும் 22 ரேஷன் கடைகள் பகுதி நேரமாகவும் இயங்கிவருகிறது. ஒரே நாளில் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்க இயலாது. நாள் ஒன்றுக்கு ஒரு ரேஷன் கடையில் 100 குடும்ப அட்டைகளுக்கு காலை 9 மணி முதல் 11 மணிவரை 25 குடும்ப அட்டைகளுக்கும் ,11-1 மணிக்கு 25 குடும்ப அட்டைகள், 3 மணி முதல்-5 மணி வரை 25, 5 மணி முதல் 7 மணிவரை 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் நிவாரண தொகை ரூ 1000 மற்றும், அரிசி, எண்ணெய் , பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது என்று வட்ட வழங்கல் அலுவலர் ராஜாமணி தெரிவித்தார். கள மேலாளர் குமாரசாமி, மணிகண்டன் சிவா. ஆகியோர் உடனிருந்தனர்.


 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,