நாசா கண்டுபிடித்த பூமிக்கு மிகவும் நிகரான கிரகம்

 


 பூமிக்கு மிகவும் ஒத்த கிரகம் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


 



பூமி-அளவு, வாழக்கூடிய மண்டல கிரகம் NASA’s Kepler space  (விண்வெளி )தொலைநோக்கி மூலம் கணிக்கப்பட்டது என ஏப்ரல் 15, 2020-ல் அமெரிக்காவில்  நாசா இயற்பியல் விஞ்ஞானிகள் குழு அறிவித்தது.


பூமியை விட 6% பெரிய பாறை அன்னிய கிரகமான கெப்லர்-1649 C மேற்பரப்பில் திரவ நீர் இருக்கிறதா ?    இந்த Kepler 1649 C எனும் ஒரு புதிய உலகம்,  சிக்னஸ்( Cygnus ) விண்மீன் தொகுப்பில் ( Galaxy )-யில் 302 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.
 வானியற்பியல் ஜர்னல் கடிதங்களில் ஒரு புதிய ஆய்வறிக்கை :
வானியலாளர்கள் தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இது பூமியின் அளவைப் போன்றது. 
“அளவு ( size ) மற்றும் வெப்ப நிலையை 
பொறுத்தவரை, இது கெப்லருடன் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு மிகவும் ஒத்த கிரகம்” என்று SETI நிறுவனத்தில் இணை ஆசிரியர் ஜெஃப் கோக்ஸின் கூறினார். 
     Kepler-1649 C  எனும் புதிய உலகம் சிக்னஸ் ( Cygnus )  விண்மீன் தொகுப்பில் 302 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கெப்லர்- 1649 c  எனப்படும்.  இது பூமியிலிருந்து தெரியாத எம் வகை நட்சத்திரத்தை சுற்றிவருகிறது. எம்- வகை நட்சத்திரம் ஒரு குறைந்த நிறை கொண்ட நட்சத்திரமாகும். இது “ சிவப்பு குள்ளன்” ( Red Dwarf ) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கெப்லர் 1649 c கிரகம்,  அதன் புரவலன் நட்சத்திரம்( host star )-ஆன எம்-வகை ‘சிவப்பு குள்ளன்’ என அழைக்கப்படும் கெப்லர் 1649-ஐச் சுற்றிவருகிறது. ஆனால் இந்த புரவலள் நட்சத்திரம் சூரியனைவிட மிகச் சிறியது என்றாலும், பூமி எவ்வளவு அளவு ஒளியை, தனது நட்சத்திரமான சூரியனிடமிருந்து பெறுகிறதோ அந்த அளவில் 75% சூரிய ஒளியை இந்த கெப்லர் பெறுகிறது. Kepler-1649 c-யின் அளவு நமது பூமியின் அளவில் 1.06 மடங்கு ஆகும். தனது நட்சத்திரத்தை கெப்லர் கிரகம் 19.5 நாட்களில் சுற்றிவருகிறது. அதாஙது Kepler-1649 c-இல் ஒரு வருடம
 என்பது நம் பூமியில் 19.5 ( பத்தொன்பதரை) நாட்களுக்கு சமம். 
     காலநிலை :  கெப்லர்-1649- c கிரகத்தின் காலநிலை மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது. இது பூமியைப் போன்ற வெப்பநிலையாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கெப்லர் 1649 c கிரகத்தின் வளிமண்டலத்தின் கலவை என்ன எனபதுபற்றி சரியாகத் தெரியவில்லை.
   புரவலன் நட்சத்திரம் ( hot star ) கெப்லர்-1649  ( எம் வகையான ஒரு ‘குள்ள நட்சத்திரம்’ )  இதன் ஆரம் ( radius ) நமது சூரியனின் ஆரத்தில் கால் பங்குதான் உள்ளது என மதிப்பிடப்படுகிறது.  அதன் சுற்றுப் பாதையில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட கிரகங்களே உள்ளன எனவும், மற்றொன்று, கெப்லர்-1649 b
ஆகும் என மதிப்பிடப்படுகிறது. 
  2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, புரவலன் நட்சத்திலிருந்து ஒளிவீச்சுகள் இதுவரை காணப்படவில்லை. எனினும் , விஞ்ஞானிகள் அத்தகைய நட்சத்திரங்கள் சூரிய ஒளிரும் செயல்பாட்டிற்கு ஆளாகின்றன என்றும், அத்தகைய எரிப்புகள் எக்ஸோப்ளானெட்டின் வளிமண்டலத்தை அகற்றி, வாழ்க்கையின் வாய்ப்பைத் தடுத்திருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.
எனினும், கெப்லர்-c வளிமண்லங்கள் மற்றும் திரவ/நீர்நிலைகள் பற்றி சிறப்பு வாய்ந்த சோதனைக் கருவிகள் உதவியுடன் தீவிர ஆராய்ச்சிகளை முனைந்து செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.


 


தகவல்  ஆர் ..ராஜமாணிக்கம்



            


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,