இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.   இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது

        உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்  (World Autism Awareness Day);


ஒவ்வொரு ஆண்டும்  ஏப்ரல் 2 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது    


 


குழந்தைகளுக்கு ஆட்டிசம் கண்டறிவது எப்படி? வெளி கொண்டுவருவது எப்படி?  


ஆட்டிசம் என்பது ஒரு நோயே அல்ல அது சர்க்கரை போன்று சாதாரண குறைபாடு என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் ஒரு சிலர் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். இதனை கண்டறிய சில வழிமுறை



  • இந்த நிலையில் இருக்கும்  குழந்தைகள் பெயர் சொல்லி அழைக்கும் பொழுது திரும்பி பார்க்க மாட்டார்கள்.

  • சரியான நேரத்தில் குழந்தைகள் பேசாமல் இருப்பது

  • சுற்றும் பொருட்களின் மீது கவனத்தை செலுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, மின்விசிறி கார் சக்கரம் போன்றவை.


இவையே ஆட்டிசதிற்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


குழந்தைகளுக்கு பேச்சு வரவில்லை என்றால் கடவுளை நாடாமல் மருத்துவரை நாடவேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் ஒரு குறைபாடு இருந்தாலும் உடனடியாக மருத்துவத்தின் பக்கம் செல்ல வேண்டும். எவ்வளவு விரைவாக ஆட்டிசம் நோயை கண்டுபிடிக்கிறோமோ  அவ்வளவு விரைவாக அந்த குழந்தையை அதில் இருந்து விடுவிக்க முடியும்.


  எந்த, எந்த நோய்க்குத்தான் முற்றிலும் குணப்படுத்த மருந்துகள் கண்டபிடிக்க வேண்டியுள்ளது.  வந்ததை தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்பதையெல்லாம் அறிய முடியாமல் இப்போது உலகமே (200 நாடுகளுக்கு மேல்) திணறிக் கொண்டிருக்கின்றன.  பிறந்த அனைவரும் இறப்பதற்குமுன் வாழ்ந்துதானே ஆகவேண்டும். 


 


இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.  இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 


 


 செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி