விருத்தாசலத்தில் ஆசிரியர்கள் நண்பர்கள் குழுவின் சார்பாக ஏழைகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்  

விருத்தாசலத்தில் ஆசிரியர்கள் நண்பர்கள் குழுவின் சார்பாக ஏழைகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்    


                                                           கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆசிரியர்கள் நண்பர்கள் குழுவின் சார்பாக உளுந்தூர்பேட்டை சாலையில் சாலையோரம் குடியிருக்க கூடிய சாலையோர குடியிருப்பு மக்களுக்காக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது அதில் அரிசி ,எண்ணெய், பருப்பு ,ரவை மற்றும் கோதுமை மாவு உள்ளிட்ட மளிகை சாமான்கள் அடங்கிய ஒரு தொகுப்பாக வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். பி.சேகர் , விருத்தாசலம் கல்வி மாவட்ட தலைவர் தலைமை ஆசிரியர் தெய்வமணி, புதுக்குப்பம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம் கம்பீரநாதன், காட்டுமயிலூர் பள்ளியின் தலைமையாசிரியர் கிடியன் எபினேசர் பாக்கியராஜ் ,பெலாந் துறை பள்ளி முது கலை ஆசிரியர் கனகராஜ், மங்கலம்பேட்டை  பள்ளி தமிழாசிரியர் பென்னட் ராஜ்குமார், நல்லூர் பள்ளி தமிழாசிரியர் புகழேந்தி ஆகியோர் தங்களது பங்களிப்பு மூலம் இதனை வழங்கினார்கள்


. கடலூர் செய்தியாளர்.  R. காமராஜ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை